பிரபல நடிகை நித்யா மேனன் செய்திருக்கும் செயல் தான் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கித்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘காதலிக்க நேரமில்லை’. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நித்யா மேனன், வினய், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். காதலர் தினத்திற்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் திடீரென ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.
தற்போது அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் இருப்பதால் தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று இருந்தது. இதில் படக்குழுவினரோடு அனிருத், மிஷ்கின் கொடுத்த சில பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின்.
மிஷ்கின் மற்றும் நித்யா மேனன்:
மேலும், மிஸ்கின் அவர்கள் நித்யா மேனனை வைத்து ”சைக்கோ’ படத்தை ஏற்கனவே இயக்கி இருக்கிறார் என்பதுக்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த மிஷ்கினை பார்த்தவுடன் நித்யா மேனன் ஆச்சரியம் அடைந்தார். ‘நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினார். பின்பு, ‘Please don’t Squish me, நான் இப்பதான் மேக்கப் போட்டு வந்தேன்’ என்று அவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு இருந்தார். பதிலுக்கு, மிஸ்கினும் நித்யா மேனனுக்கு கையில் முத்தமிட்டு இருந்தார்.
தொடாதேள்.. செத்த தள்ளி நில்லுடா அம்பி.. உடம்பு சரியல்லைன்னோ..
— Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) January 9, 2025
ஆனா பாருங்க அந்த உடம்பு சரியில்லாதது நடிகர்களை கட்டிப் பிடிக்குறப்போ, முத்தம் கொடுக்குறப்போ வராதா?
நித்யா மேனனின் நவீன தீண்டாமை pic.twitter.com/M5EQmbeNy5
ரசிகரை நிராகரித்தது ஏன்?:
அதற்குப் பிறகு, அங்கிருந்த ஜெயம் ரவியையும் ஹக் செய்து இருந்தார். அதைத்தொடர்ந்து , நித்யா மேனன் மேடை ஏறிய பிறகு ஒருவர் மைக் சரி செய்திருந்தார். பின்பு, அந்த நபர் நித்யாவுக்கு கை கொடுத்திருந்தார். ஆனால், நித்யா மேனன், ‘எனக்கு உடம்பு சரியில்லை, அப்புறம் உங்களுக்கும் கோவிட் ஏதாச்சும் வந்துரும்’ என்று கூறி அவரை நிராகரித்து இருந்தார். இதற்கு முன்பாக நித்தியாமனனுக்கு மைக் சரி செய்து கொண்டிருக்கும்போதே, நடிகர் வினை மேடை ஏறி வந்து நித்யா மேனனை கட்டிப்பிடித்து இருந்தார். ஆனால், அப்போதும் அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
வைரலாகும் வீடியோ :
தற்போது, நித்யா மேனனின் இந்த செய்கைகளை வீடியோவாக எடிட் செய்து இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு, ‘பிரபலங்களை கட்டிப்பிடிக்கும் போதும், முத்தம் கொடுக்கும் போதெல்லாம் பரவாத நோய், ரசிகருக்கு கை கொடுக்கும் போது மட்டும் பரவி விடுமா? ‘ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில்அறிமுகமாகி இருந்தார்.
நித்யா மேனன் திரைப்பயணம் :
இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. பின் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூலம் நித்யா மேனன் கேரியர் டாப்புக்கு சென்றது. இந்த படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான ‘தேசிய விருது’ பெற்றிருந்தார். தற்போது பிஸியான நடிகையாக நித்யா மேனன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.