கொரோனா இருக்கையில் தான் நடித்த படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற நிவேதா தாமஸ் – போலீசில் புகார்அளித்த நெட்டிசன்கள். அவரின் விளக்கம் இதோ.

0
4208
nivetha
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். சமீபத்தில் நடிகர் சூர்யா கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். இப்படி ஒரு நிலையில் தமிழில் பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்த நிவிதா தாமஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : ஆம்பள பையனா இருந்தா இந்த 3 விஷயம் தெரிஞ்சி இருக்கனும்னு என் அப்பா சொல்வாரு – சந்தானத்தின் வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தொற்றோடு தியேட்டருக்கு சென்றதாக பலரும் இவரை சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி இருந்தது. பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற பலர் நடித்துள்ள இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸ் இந்த படத்தை காண திரையரங்கிற்கு சென்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கொரோனா தொற்று இருக்கும் போது எப்படி திரையரங்கிற்கு செல்லலாம் என்று கேள்வி எழுப்பியதோடு கடுமையாக திட்டி தீர்த்து வந்தனர். அதிலும் ஒரு சிலர் ஹைட்ராபாத் போலீஸ் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்தனர். இதற்கு பதில் அளித்துள்ள நிவேதா தாமஸ், நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன். தற்போதைக்கு எனக்கு கொரோனா இல்லை. எப்போதும் நான் பொறுப்பில்லாமல் நடந்த கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement