ஆம்பள பையனா இருந்தா இந்த 3 விஷயம் தெரிஞ்சி இருக்கனும்னு என் அப்பா சொல்வாரு – சந்தானத்தின் வீடியோ இதோ.

0
2396
santhanam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்கு நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்களிடையே பிரபலமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். பின்னர் நடிகை ராதிகா இயக்கிய அண்ணாமலை என்ற தொடரிலும் நடிகர் சந்தானம் நடித்து இருந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானம் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : காவ்யாவிற்கு சினிமாவில் அடித்த லக் – அதுவும் யார் படத்தில் பாருங்க. (எல்லாம் முல்லை கதாபாத்திரித்தோட ராசி )

- Advertisement -

சினிமாவில் நடிக்க வரும் முன்பு நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான் ஆனால் நடிகர் சந்தானம் லொள்ளு சபாவில் இருந்தபோதே ஒரு லோக்கல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். ஆம் ரைட் என்ற தொலைக்காட்சியில் நடிகர் சந்தானம் நேயர்களுடன் பேசும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில் அவரது சிறு வயது புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அப்போது சந்தானம் சிறு வயதில் கராத்தே உடையில் இருக்கும் புகைப்படம் காண்பிக்கப்பட்ட போது அதுகுறித்து பேசிய சந்தானம், நான் 8 ஆம் வகுப்பு படித்த போது எடுத்த புகைப்படம் அது. என் அப்பா ஒன்னு சொல்லுவார் ‘ஆம்பள பையனா இருந்தா மூணு விஷயம் தெரிஞ்சி இருக்கனும். நீச்சல் ஓட்ட தெரியணும், மரம் ஏறத் தெரியணும், சைக்கிள் ஓட்ட தெரியணும்னு. அப்போ தான் கராத்தே கிளாஸ் சேத்து விட்டாரு ‘ என்று கூறியுள்ளார் சந்தானம்.

-விளம்பரம்-
Advertisement