குழந்தை வளர்ப்பு தொடர்பாக சின்மயி பதிவிட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி. இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் இவர் அடிக்கடி தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
If MY daughter does not want to be hugged by me, her mother, who carried her and her twin brother, and birthed her at ANY given point in time - I ll let her be until she is ready for a hug.
— Chinmayi Sripaada (@Chinmayi) July 29, 2024
I am not going to force her to hug me because I want it.
The same applies to my son.
If… https://t.co/DvwG71Qp3Q
சின்மயி பதிவில், சின்மயி கணவர் அவருடைய பெண் குழந்தைகளிடம் கட்டிப்பிடிக்க சென்றிருக்கிறார். ஆனால், அந்த குழந்தைகள் கட்டிப்பிடிக்க மறுத்திருக்கிறது. இதனால் அவர் கணவர் குழந்தைகளை கட்டாயப்படுத்தவில்லை என்று சின்மயி குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் சின்மயியை விமர்சித்து வந்தார்கள். அதில் ஒருவர், இதுவே உங்களுக்கு ரெண்டு வயது பெண் குழந்தை பதிலாக ஆண் குழந்தையாக இருந்து அம்மா கட்டி அணைக்க வரும்போது அதற்கு குழந்தை வேண்டாம் என்று சொன்னால் அதுக்கும் இதே கருத்தை தான் சொல்வீர்களா? என்று கேட்டிருந்தார்.
சின்மயி பதிவு:
இதற்கு சின்மயி, மகள் என்னுடன் கட்டிப்பிடிக்க விரும்பவில்லை என்றால் அவளை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். நான் இரட்டை குழந்தைக்கு தாய். என் மகன் விருப்பம் இல்லை என்றால் அவனுடைய தாய் என்ற அடிப்படையில் நான் அவர் ஒரு நிலைக்கு தயாராகும் வரை அவனை அப்படியே விட்டுவிடுவேன். என் மகளுக்கும், மகனுக்கும் இதே தான் பொருந்தும். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதையே மற்றவர்களையும், குழந்தைகளையும் செய்ய கட்டாயப்படுத்த கூடாது.
If your daughter didn’t wriggle out and didn’t push you away when you reached for a hug - she has consented. If as a parent you are unable to read a yes or no - nothing more needs to be said.
— Chinmayi Sripaada (@Chinmayi) July 30, 2024
If you keep forcing her despite her pushing and wriggling out when she wants some… https://t.co/1hcP6domrF
நெட்டிசன்கள் விமர்சனம்:
பலவீனமான உங்களுக்கு பதில் சொல்லவே முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு நெட்டிசன் ஒருவன், உங்களிடம் குழந்தைகள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தால் நீங்கள் ஒரு மனிதனாக தோற்று விட்டீர்கள். எப்படியும் அவர்கள் ரொம்ப அப்பாவியாக இருக்கிறார்கள். குழந்தைகள் நிச்சயமாக அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், சொந்த பெற்றோர்களிடம் இப்படி நடந்து கொள்ள தேவையில்லை. ஒரு மனிதனாக நீங்க தோற்று விட்டீர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
Speaking of Consent and Boundaries in a Country that kills their daughter if she marries according to her wish - In a land where Soup Boy who abuses his girlfriend who leaves him - is a Hero.
— Chinmayi Sripaada (@Chinmayi) July 30, 2024
I routinely have spoken of things which has received massive abuse and a Hurttttu Batch…
சின்மயி பதிலடி:
இதற்கு சின்மயி, என்னுடைய கணவர் அவளுடைய சுயசிந்தனையை மதிக்கிறார். எல்லாவற்றையும் விட பைத்தியக்காரத்தனமான ஆண்கள் இங்கு அதிகம் இருக்கிறார்கள். இதை எந்த விவேகம் உள்ள மனிதனும் புரிந்து கொள்வார். உங்கள் குழந்தையின் சம்மதம் எப்படி இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. உன்னை போன்றவர்கள் மனிதர்களை அதிகம் நம்ப மாட்டார்கள் என்று என்னால் சொல்ல முடியும். மற்றவர்களை குறை கூறுவதற்கு முன்பு நீங்கள் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
சின்மயி குறித்த தகவல்:
கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை சின்மயி திருமணம் செய்து கொண்டார். ராகுல் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான 'மாசுகோவின் காவேரி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார். மேலும், ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் இவர்கள் இரட்டை குழந்தைகள் பிறந்தது.





