உங்க மேல இருந்த கொஞ்ச நஞ்சு மரியாதையும் போச்சு – பிராமணர்கள் குறித்து பாஸ்கி சொன்ன கருத்தால் கடுப்பான நெடிசன்கள்

0
677
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாஸ்கி என்றால் உடனே நியாபகம் வருவது அவருடைய காமெடிகள் தான். இவர் மொட்டைக்காகவே மொட்டை பாஸ்கி என்று பிரபலமானவர் இவர். பத்திரிகையில் இருந்து தொடங்கி, ரேடியோ ஜாக்கி, திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஒலிப்பதிவாளர், என சினிமா உலகில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவிட்டார். மேலும் இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவை ஆற்றலின் மூலம் ரசிகர்களை கவர்த்தவர்.

-விளம்பரம்-

இப்படி பட்டா நிலையில் தான் கோயம்பத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஸ்கி பிராமின சமூகத்தை பற்றி பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில் “பிராமின்” என்பதும் “பிரம்மன்” என்பதும் ஒரே மாதிரியாக ஒலிக்கிறது என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பிராமணர் சமூகத்தை பற்றி கூறுகையில் படைப்புக்கு “பிரம்மன்” என்று சொல்லுவார்கள். “பிராமணர்கள்” மற்றும் “பிரம்மா” இரண்டுமே ஒரே மாதிரியாக ஒலிக்கின்றது. எனவே இரண்டிற்கு எந்த வித்தியாசமும் கிடையாது. படைப்பாற்றலும் பேர் போன சமூகம் பிராமணர் சமூகம் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் தாம் இந்த உலகிலேயே சுப்பீரிம் சமூகத்தினர் என்று கூறினார்.

மேலும், “ஐயர்” மற்றும் “ஐயங்கார்” இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் இடையே நடக்கும் விவாதத்தை பற்றி பேசிய பாஸ்கி நான் அவளுடன் ஒருபோதும் சண்டையிட மாட்டேன், ஏனென்றால் உலகின் மிக புத்திசாலித்தனமான மூளை நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது என்று நான் உணர்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார் மேலும் “நம்மிடையே ஒற்றுமை குறைவாக இருக்கக்கூடாது” என்று கூறினார்.

-விளம்பரம்-

கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

மொட்டை பாஸ்கி இப்படி கூறியது வைரலாக நிலையில் நெட்டிசன்கள் பலரும் கடமையாக பாஸ்கியை விமர்சித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்கள் சிலர் “மொட்டை பாஸ்கி”நாமதான் உலகத்துலேயே சுப்ரீம் கம்யூனிட்டி,” என்கிறார். மாமா, மாமி எல்லாம் கைதட்டுறதுகள். ஹிட்லரும் இதையேதான் சொன்னான், ஆரிய இனமே உலகில் உயர்ந்த இனம் என! மைலாப்பூர் நாஜிக்கள் ஜெர்மானிய நாஜிக்களைவிட ஆபத்தானவர்கள். இனவெறியை எப்படி கைதட்டிக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள் என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement