உண்மையா? உருட்டா? 17 லட்சம் ஏமாந்தாரா சௌந்தர்யா? இதோ விவரம்

0
160
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நான்கு வாரம் முடிந்து 33 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் 8:

அதன் பின் நிகழ்ச்சியை சுவராசியமாக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது.

கடந்து வந்த பாதை டாஸ்க்:

இதில் ஒவ்வொரு போட்டியாருக்குமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்கள். அதில் சௌந்தர்யா, நான் எட்டு வருடமாக மாடலிங், நடிப்பு மூலம் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த 17 லட்சம் ரூபாய் ஒரே ஒரு போன் காலில் போய்விட்டது. என்னை மிரட்டி அந்த பணத்தை வாங்கினார்கள். எனக்கு ஒரு போன் வந்தது. அதில், உங்க போனை நாங்கள் ஹேக் செய்து விட்டோம். நீங்கள் இப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறீங்க. உங்களைப் பற்றி நாங்கள் தவறாக செய்திகளை வெளியிடுவோம்.

-விளம்பரம்-

சௌந்தர்யா சொன்னது:

உங்களுடைய பெயரை கெடுக்க எங்களுக்கு ஒரு நொடி போதும். நாங்கள் அப்படி எல்லாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்கணும் என்றெல்லாம் மிரட்டினார்கள். எனக்கு என்ன பண்ணனும்னே தெரியவில்லை. உடனே பயத்தில் நான் பணத்தை கொடுத்து விட்டேன். அதிலும் நீங்க யாருக்கும் மெசேஜ் அனுப்பியோ, கால் பண்ணியோ சொல்லக்கூடாது. ஒரு நிமிடத்திற்குள் எங்களுக்கு பணம் வரணும் என்று சொன்னதால் நான் என்னை அறியாமலேயே அதை செய்து விட்டேன். அதுவும் போன மாதம் தான் நான் பணத்தை கொடுத்து ஏமாந்தேன். அந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது தான் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கூட என்னுடைய அப்பாவிடம் கடன் வாங்கிக் கொண்டுதான் நான் வந்தேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார்.

நெட்டிசன்கள் கருத்து:

இப்படி இவர் பேசியிருந்தது தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி இருக்கிறது. இதற்கு பலரும் எப்படி இவர் ஆன்லைனில் ஏமாந்தார்? இது நம்பும்படியாக இல்லை என்று சிலர் விமர்சித்து இருக்கிறார்கள். சிலர் சௌந்தர்யாவிற்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் பரிதாபங்கள் சுதாகர்-கோபி, போன் கால் மூலம் பணத்தை பறிப்பது எப்படி என்றெல்லாம் நடித்து வீடியோ போட்டு இருக்கிறார்கள். சிலர், சௌந்தர்யா ஏன் புகார் கொடுக்கவில்லை? என்றாலும் கேட்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் சௌந்தர்யா புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் சோசியல் மீடியாவிலும் பதிவு போட்டு இருந்தார். தற்போது அதை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதன் மூலம் சௌந்தர்யா சொன்னது உண்மை என்பது தெரிய வந்திருக்கிறது.

Advertisement