சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டது. சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் கயல், எழிலை நண்பராக தான் பார்த்தார். பின் எப்படியோ எழில், தன்னுடைய காதலை கயலிடம் சொன்னார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது. இருந்தாலும், கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
பின் எழிலுக்கு ஆர்த்தியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்த திருமணத்தில் எழிலுக்கு விருப்பம் இல்லை. கடைசியில் அந்த திருமணம் நின்றது. ஒரு வழியாக எழிலை காதலிப்பதை கயல் ஒத்துக் கொண்டார். கயல்-எழில் காதலிக்க தொடங்கினார்கள். ஆனால், எழிலின் அம்மாவிற்கு கயலை பிடிக்கவில்லை. இருந்தாலுமே எழில், கயலை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார். பின் கயல்- எழில் திருமண வேலைகளும் சிறப்பாக கோலாகலமாக நடந்தது.
கயல் சீரியல்:
அப்போது கயலின் அம்மாவிற்கு விஷம் கொடுத்ததால் திருமணம் தடைபட்டது. அதற்கு பின் கயல் உடைய அம்மா குணமாகி வந்துவிட்டார். இருந்தாலுமே கயல்- எழில் இருவரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மீண்டும் கயல்-எழில் திருமணம் நடந்தது. கயலுக்கு திருமணமான பிறகு அவருடைய நண்பரின் மூலம் கயலின் வாழ்க்கையில் பிரச்சினை வருகிறது. இருந்தாலுமே கயல்- எழில் இருவரும் எதிர்கொண்டு வருகிறார்கள். தற்போது கயல் சீரியலில் தேவிக்கு வளைகாப்பு நடத்த கயல் ஏற்பாடு செய்திருக்கிறார்.
தேவி வளைகாப்பு:
தேவியின் கணவர் தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்டு வளைகாப்புக்கு வர மறுக்கிறார். மேலும், எப்படியாவது தேவியின் கணவர் விக்னேஷை சமாதானம் செய்து வளைகாப்பை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் கயல் இருக்கிறார். பின் வளைகாப்பு தொடங்கி விட்டது. உறவினர்கள் எல்லோருமே மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரவில்லையா? என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் கயல் குடும்பம் இருக்கிறது. விக்னேஷ் வரமாட்டார் என்று எல்லோருமே நினைக்கிறார்கள். ஆனால், கயல் மட்டும் வருவார் என்று எதிர்பார்க்கிறார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
கயல் எதிர்பார்த்தபடியே விக்னேஷும் வளைகாப்பிற்கு போக வேண்டும் என்று நினைக்கிறார்.
பின் கயல்-எழில் இருவரும் தேவிக்காக விக்னேஷிடம் பேசுகிறார்கள். விக்னேஷுமே மனமிறங்கி தன்னுடைய மனைவியின் வளைகாப்புக்கு செல்கிறார். ஆனால், வளைகாப்புக்கு போகவிடாமல் தடுக்க விக்னேஷ் அம்மா, குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடுகிறார். இனி அடுத்து என்ன? என்று தான் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
நெட்டிசன்கள் கிண்டல்:
இப்படி இருக்கும் நிலையில் கயல் சீரியலை நெட்டிசன்கள் கலாய்க்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒன்றரை வருடத்திற்கும் மேலாகவே தேவி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வளைகாப்பும் நடக்கவில்லை. தேவி கர்ப்பமாகவே இருக்கிறார். அவருக்கு வளைகாப்பு நடக்கவில்லை, குழந்தையும் பிறந்த பாடும் இல்லை. கயலின் திருமணத்தையே இரண்டு மாதம் நடத்தினார்கள். தேவியின் வளைகாப்பு நடத்தி அவருக்கு பிரசவம் நடப்பதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும் என்ற நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.