GOAT படத்தை பார்த்துவிட்டு இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு – யாரையெல்லாம் TAG பண்ணி இருக்காங்க பாருங்க

0
306
- Advertisement -

கோட் படம் தொடர்பாக விக்னேஷ் சிவன் போட்ட பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். பின் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள்.

- Advertisement -

கோட் படம் குறித்த தகவல்:

உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். கோட் படம் வசூல் ரீதியாக நல்ல சாதனை சேர்ந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் பதிவு:

அதில், கோட் படத்தில் நடித்திருக்கும் எல்லா நடிகர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பெயர்களை மென்ஷன் பண்ணி விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார். ஆனால், அவர் பிரபுதேவா பெயரை மட்டும் போடவில்லை. இதை தான் நெட்டிசன்கள் டேக் செய்து கிண்டல் அடித்து வருகிறார்கள். காரணம், ஏற்கனவே நயன் விஷயத்தில் பிரபுதேவா- விக்னேஷ் சிவன் இடையே சலசலப்பு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதை மனதில் வைத்து தான் விக்னேஷ் சிவன் பிரபுதேவாவின் பெயரை போடவில்லை என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

கோட் படம்:

தற்போது நெட்டிசன்கள் விக்னேஷ் சிவன் மெசேஜை தான் ட்ரோல் செய்து வைரலாகி வருகிறார்கள்.
மேலும், கோட் பட கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் டீம் அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள்.

படத்தின் கதை:

அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே, தாய்லாந்துக்கு தனது மனைவி (சினேகா) மற்றும் குழந்தையுடன் காந்தி செல்கிறார். அங்கு காந்தி தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், கடைசியில் தனது மகனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement