‘தேவாரா’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் அனிருத் பாடிய வீடியோவை தான் இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அனிருத் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் தான் பாடியிருந்தார்.
பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் படத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘3’ படத்தின் மூலம் தான் அனிருத் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரின் மெலோடி பாடல்கள், குத்துப் பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தேவாரா குறித்து:
மேலும், இவர் தமிழ்மொழி மட்டும் இல்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் தற்போது இவர் ‘தேவாரா’ திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதான் இவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகும் முதல் படமாகும். இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருக்கிறார்.
தேவாரா பிரமோஷன்:
இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் ஸ்ரீகாந்த், நரேன் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பு அனிருத்:
அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்த படத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது மேடையில் பேசிய அனிருத், தெலுங்கில் நான் இசையமைப்பது இது நான்காவது படம் தான். ஆனால், எனக்கு அங்கு நிறைய வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றவாறு பேசியிருந்தார். அப்போது அவரிடம் தேவாரா பாடல்களில் சில வரிகள் பாடச் சொல்லி தொகுப்பாளினி கேட்டிருந்தார்.
Hey I have seen this one this is a classic
— Vamc Krishna (@lyf_a_zindagii) September 17, 2024
Sound ye ledentra @anirudhofficial paduthunte 😭😭#Devara pic.twitter.com/JKBDYWqgaL
ட்ரோல் செய்யும் இணையவாசிகள்:
அப்போது, அனிருத் சில வரிகளை பாடியிருந்தார். பாடும் போது பழக்க தோஷத்தில் பாட்டு பாடிவிட்டு பிரஸ்ஸை நோக்கி மைக்கை நீட்டி இருந்தார். ஆனால், எதிரில் இருந்தவர்கள் பிரஸ் என்பதால் பாடவில்லை. தற்போது அனிருத்தின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ‘அனிருத் பாடும் போது சவுண்டே இல்லையே’ என்று பாடகர் சித் ஸ்ரீராமோடு இணைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள். அதற்கு சிலர், அது பிரஸ் மீட் தான், அங்கு ஃபேன்ஸ் இருக்க மாட்டார்கள் என்று அனிருத்துக்கு ஆதரவாக கமெண்டுகள் போட்டு வருகிறார்கள்.