அருணுக்காக பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா செய்த வேலை-கழுவி ஊற்றும் ரசிகர்கள்

0
251
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 17 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக ஓட்டு பெற்று சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வந்து விட்டார். பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். பின் இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் அர்னவ் வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இந்த வாரம் ஆண்கள் அணியில் இருந்து ஜெப்ரி, பெண்கள் அணியில் இருந்து சாச்சனா இடம் மாறி இருந்தார்கள். பின் மூன்றாம் வாரத்திற்கான நாமினேஷனில் தர்ஷா, அருண், ஜாக்லின், அன்ஷிதா,பவித்ரா ஜனனி, சத்யா,முத்துக்குமரன்,சௌந்தர்யா ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். இந்த வாரம் மீண்டும் கேப்டனாக தர்ஷிகா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். நேற்று எபிசோட்டில் சாச்சனாசுவுக்கு வயிறு வலி என்பதால் கன்பெக்சன் ரூமுக்கு அருண் அழைத்து சென்றார்.

நேற்று எபிசோட்:

இதனால் அருண் விதியை மீறி சென்றதால் பாய்ஸ் போட்ட கண்டிஷனை கேன்சல் செய்து விடலாம் என்றெல்லாம் பெண்கள் அணி பேசியிருந்தார்கள். ஆனால், இது ரொம்ப மோசமான எண்ணம். உதவி செய்ய தான் அருண் சென்று இருந்தார். அதுவும் தர்ஷிகாவிடம் அனுமதி கேட்டார். அதற்குப் பின் ஸ்டார் ஹோட்டல் என்ற வீக்லி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். ஹோட்டல் நிர்வாகத்தை முதலில் பெண்கள் அணியிடம் கொடுக்கப்பட்டது. முதலில் மேனேஜராக பவித்ரா இருந்தார்.

-விளம்பரம்-

அர்ச்சனா பதிவு:

பின் அவர்கள் செய்ததில் சில குறைகளை சொல்லி மேனேஜரை ஆண்களை மாற்ற வைத்தனர். அதற்குப்பின் சுனிதா மேனேஜர் ஆனார். இப்படி சுவாரசியமாக நேற்று எபிசோட் சென்றது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நிகழ்ச்சியில் அருண் பேச வரும்போது எல்லாம் விஜய் சேதுபதி பாதியிலேயே தடுத்து நிறுத்தி உட்கார வைத்திருந்தார். இதை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்பது போல தன்னுடைய இன்ஸ்டாவில் ஸ்டோரியாக அர்ச்சனா பதிவு போட்டு standby அருண் பிரசாத் என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்.

நெட்டிசன் ட்ரோல்:

இதை பார்த்த நெட்டிசன், இது ரொம்ப கேவலமான செயல். தன்னுடைய பாய் பிரண்டுக்காக பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா எல்லாம் செய்வதா, இதே கமலஹாசன் சார் இருந்திருந்தால் பண்ணி இருப்பீங்களா? இது அவருடைய பாய் பிரண்டை காப்பாற்றுவதற்காக அவரே எடிட் செய்த வீடியோவாக இருக்கும் என்றெல்லாம் ட்ரோல் செய்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். சில ஆண்டுகளாகவே அர்ச்சனா அருனும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால், இது குறித்து இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை.

Advertisement