60 ஆடு, நள்ளிரவில் சிக்கன் ரைஸ் – கேலிக்கு உள்ளாகும் மாரி செல்வராஜின் பேட்டிகள்

0
566
- Advertisement -

மாரி செல்வராஜை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் மூலம் உலகில் அறிமுகம் ஆனார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

வாழை படம்:

இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே மாரி செல்வராஜை பாராட்டி வருகிறார்கள்.

மாரி செல்வராஜ் பேட்டி:

அதுமட்டுமில்லாமல் இந்த படம் தொடர்பாக மாரி செல்வராஜ் நிறைய பேட்டிகள் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவர் ஒரு பேட்டியில், நான் சின்ன வயதில் இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். ஒருவேளை சாப்பாட்டுக்கு எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கிறேன். சாப்பாடு இல்லாத காலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணி எல்லாம் குடித்து இருந்தேன். நான் சென்னைக்கு வந்த பிறகு சாப்பாடு இல்லாத போது ஐந்து ரூபாய்க்கு சிக்கன் ரைஸ் வாங்கி மூன்று பேர் ஷேர் செய்து சாப்பிட்டு இருக்கோம். அதுவும் கடை மூடும் நேரத்தில் தான் நாங்கள் போவோம்.

-விளம்பரம்-

மாரி செல்வராஜ் குடும்ப சூழ்நிலை:

அப்போதுதான் எங்களை பாவம் பார்த்து அதிகமாக தருவார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் நிறைய இடங்களில் வேலை செய்தேன். சரவணா ஸ்டோர்ஸில் வேலை பார்த்தேன். ஒரு வீட்டில் வேலை செய்தேன், பெட்ரோல் பங்க், விவசாயம் பார்த்தேன். அதற்கு பிறகுதான் ஆபீஸ் பாயாக வேலைக்கு வந்தேன் என்று கூறியிருந்தார். இப்படி மாரி செல்வராஜ் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. காரணம், இவர் ஏற்கனவே அளித்த பேட்டியில் 60 ஆடுகள், பண்ணிகள், நிலம் எல்லாம் வைத்திருந்தேன் என்று சொல்லியிருந்தார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இப்படி இருக்கும் போது இவர் எப்படி ஏழையாக இருக்க முடியும். இவன் 40 வருடங்களுக்கு முன்பு சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக சொன்னார். தற்போது இவர் 40 வயதாகும் போது குழந்தையிலேயே சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டாரா? என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள். இருந்தாலும் சிலர், இவர் சென்னைக்கு வந்த பிறகு தான் சிக்கன் ரைஸ் சாப்பிட்டார் என்று பார்த்தால் 15 வருடத்திற்கு முன்னாடி சிக்கன் ரைஸ் வந்தது உண்மைதான். அவர் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார் என்றெல்லாம் ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement