பிக் பாஸ் பூர்ணிமாவின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் பூர்ணிமா ரவி. இவர் வேலூரை சேர்ந்தவர். பின் அங்கேயே பூர்ணிமா பள்ளி படிப்பை முடித்தார். பின் விஐடியில் தனது பட்டப் படிப்பை முடித்த பூர்ணிமாவுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன் பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அராத்தி என்ற youtube சேனலை தொடங்கினார் பூர்ணிமா.
அதில் தனது நடன வீடியோக்கள், தனது புதிய யோசனைகளை பதிவு செய்து வந்தார். மேலும், இவர் பதிவிடும் வீடியோக்கள் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அதை விரும்பிப் பார்த்தனர். youtube மூலம் கிடைத்த ரெஸ்பான்ஸை வைத்து இவர் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்ட ‘ஹே சண்டைக்காரி’ என்கிற ஒரு சில வெப் சீரியஸ்களிலும் பூர்ணிமா நடித்தார்.
பூர்ணிமா ரவி குறித்த தகவல்:
இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்த பூர்ணிமா ரவிக்கு ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் இவர் பாலா சரவணனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் அவருக்கு தோழியாக பூர்ணிமா நடித்திருந்தார். இதை அடுத்து பூர்ணிமா ரவிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
விஜய் டிவியில் பிரம்மாண்டமாய் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 7’ நிகழ்ச்சியில் தான் பூர்ணிமா போட்டியாளராக கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான மாயாவுடன் சேர்ந்து கொண்டு பிரதீப் ஆண்டனிக்கு எதிராக போர் கொடி தூக்கி இருந்தார் பூர்ணிமா. இருந்தாலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 96 ஆவது நாள் வரை தாக்குப்பிடித்து, 16 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
பூர்ணிமா திரைப்பயணம்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு ஒரு சில படங்கள் மட்டுமே அமைந்தது. அந்த வகையில் இவர் ‘செவப்பி’ மற்றும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்கிற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது பெரிதாக எந்த பட வாய்ப்பு இல்லாததால் பூர்ணிமா போட்டோ ஷூட் களில் களம் இறங்கி இருக்கிறார்.
பூர்ணிமாவின் லேட்டஸ்ட் வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் பூர்ணிமாவின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, அமரன் படத்தில் சாய் பல்லவியின் கெட்டப்பில் பிக் பாஸ் பூர்ணிமா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதிலும் சிலர், உங்களுக்கு சாய் பல்லவியின் நினைப்பா? என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.