குக் வித் கோமாளி ஷோவை பிக் பாஸ் போல நினைச்சுட்டாங்க- பிரியங்காவை விமர்சிக்கும் ரசிகர்கள்.

0
434
- Advertisement -

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பிரியங்கா செய்யும் அட்ராசிட்டியால் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், தயாரிப்பு Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, டிடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளர்களாக களம் இறங்கினார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி 5:

இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, KPY வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில், விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள். கோமாளிகள் வழக்கம் போல் குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், அதை பிரியங்கா காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிறார். இதனால் நெட்டிசன்கள் கடுப்பாகி கமெண்ட்டுகள் போட்டு வருகிறார்கள்.

நெட்டிசன்கள் கமெண்ட்:

அதில், இந்த சீசனில் பிரியங்கா செய்யும் சில விஷயங்கள் கடுப்பை ஏற்றும் அளவிற்கு இருக்கிறது. கோமாளிகள் செய்யும் காமெடியை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு வெறுப்பை காண்பித்து வருகிறார். பிரியங்கா தொகுப்பாளராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தாலும், மற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் அவரை தான் எல்லோரும் கவனிக்க வேண்டும் என்று சில வேலைகள் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக இருந்தாலும், தொகுப்பாளர் போலவே சீன் போடுகிறார் என்றெல்லாம் விமர்சித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

புகழுடன் மோதிய பிரியங்கா:

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் பிரியங்கா சிக்கியுள்ளார். அதாவது சமீபத்தில் முடிந்த எபிசோடில், ஆரம்பம் முதலே புகழ் மற்றும் பிரியங்கா ஆகியோர் சண்டை நடப்பது போல் தான் காட்டியிருந்தார்கள். இது உண்மையான சண்டையா, இல்லை இயக்குனர் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டா என்பது போல்தான் அவர்களின் வாக்குவாதம் இருந்தது. தனது கோமாளியை மாற்றிவிட்ட புகழ் மீது பிரியங்கா பயங்கர கோபமாக இருந்தார். புகழ் இதுவரை ‘செஃப் ஆஃப் த வீக்’ ஒரு முறை கூட வாங்கவில்லை என சொல்லி அசிங்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ஜெயித்துக் காட்டிய சுஜிதா- புகழ் ஜோடி:

கடைசியில் சமையல் செய்து முடித்த பிறகு, நடுவர்கள் அதை ருசி பார்த்து ரிசல்ட் அறிவித்தனர். அதில் டிடிவி கணேஷ் டேஞ்சர் ஜோனுக்கு செல்கிறார் என அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, செஃப் ஆஃப் த வீக் டைட்டில் டைட்டில் சுஜிதா அல்லது திவ்யா துரைசாமி ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடைசியில் புகழ் மற்றும் சுஜிதா ஜோடி தான் செப் ஆப் த வீக் டைட்டில் கொடுக்கப்பட்டது. தற்போது பிரியங்கா இது போல் நடந்து கொள்வதால் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, பிக் பாஸ் நிகழ்ச்சி போல மாற்றி வருகிறார். அவரை சீக்கிரம் இந்த ஷோவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement