COME BACK என்று சொன்னவர்களை GO BACK என்று சொல்ல வைத்த சாச்சனாவின் நடவடிக்கை

0
192
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சாச்சனா குறித்து நெட்டிசன்கள் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று பத்தாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ஒருவராக சாச்சனா இருக்கிறார். இவர் நிகழ்ச்சி நுழைந்த முதல் நாளே 24 மணி நேர எவிக்ஷனில் வெளியேறி இருந்தது பலருக்குமே வருத்தத்தை கொடுத்திருந்தது.

நிகழ்ச்சியில் சாச்சனா:

பின் எல்லோரும் சாச்சனா வெளியேறியதற்கு கம்பேக் சாச்சனா என்றெல்லாம் ஹேஷ்டேக் போட்டு அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். இதனாலேயே சாச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். இவரின் என்ட்ரி பயங்கரமாக இருந்தது. அதற்கு பின் சாச்சனாவின் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி வருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி வந்து எபிசோட்டில், நீ ஓவர் காண்பிடண்ட்டாக இருக்கிறாய். ஒழுங்காக விளையாடு என்று அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

சாச்சனா செயல்:

பின் பெண்கள் அணியிடம் பெண்கள் ஆண்கள் இரு அணிகளிடம் மாத்தி மாத்தி சாச்சனா பேசியதை விஜய் சேதுபதி வெளிப்படையாக சொல்லி இருந்தது அவருக்கு பயங்கர பல்பாக இருந்ததுகுறிப்பாக, நேற்று நடந்த டாஸ்க்கில் பெண்கள் அணியில் இருந்து இரண்டு பேர் சமைக்க வேண்டும் என்று ஜாக்லின், சாச்சனா பெயரை தேர்வு செய்து இருந்தார்கள். இவர்கள் தான் இந்த வாரம் முழுவதும் சமைத்து, பாத்திரம் விலக்கவேண்டும் என்று சொன்னவுடன் இருவருமே பயங்கர ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் சாச்சனா அழுது புரண்டெல்லாம் இருந்தார்.

சாச்சனா திட்டும் ரசிகர்கள்:

அதற்குப் பின் ஆண்கள் அணியிடம் அவர் வாக்குவாதம் செய்து இருந்தார். அப்போது முத்து, நீங்கள் மட்டும் செய்யவில்லை. உங்களுடன் இன்னும் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள் என்று சொன்னவுடன், எனக்கு என்ன முடியுமோ அதுதான் செய்ய முடியும் என்று சாச்சனா சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது. பின் சாச்சனா, ஜாக்லின் உடன் சேர்ந்து கொண்டு ஆண்களை பழிவாங்குவதாக நினைத்து தேவை இல்லாத வேலை செய்கிறார். அதிலும் சாச்சனா, டிஷ்யூ பேப்பரை எல்லாம் கண்ட இடத்தில் போட்டு கேவலமான வேலைகள் செய்து இருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாக்கி கம்பாக்சாச்சனா இல்லை, நீ கோ பேக் சாச்சனா என்று திட்டி வருகிறார்கள்.

Advertisement