சாலை ஓரத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு இயேசுவின் புத்தகத்தை படிக்க சொல்லி நடிகர் ஸ்ரீகுமார் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பிரபல இசை இயக்குனர் சங்கர் கணேஷின் மகனாவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை காவியாஞ்சலி என்ற தொடரின் மூலம் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து இவர் கண்மணி, அகல்யா, ஆனந்தம், மலர்கள், மேகலா, சிவசக்தி, உறவுகள், இதயம், கனா காணும் காலங்கள், பிள்ளைநிலா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி, பிள்ளை நிலாபோன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
ஸ்ரீ குமார் குறித்து சொன்னது:
குறிப்பாக, இவர் பம்பரக் கண்ணாலே, சரோஜா தேவி, ரங்கூன், ஆர்கேநகர் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், ஸ்ரீ குமார் சீரியல் மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த 'வானத்தைப்போல' சீரியலில் ஸ்ரீ நடித்து இருந்தார்.
ஸ்ரீ குமார் குடும்பம்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற தொடர் தான் வானத்தைப்போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்ட தொடர். இந்த தொடரில் மான்வி, ஸ்ரீகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் இந்த முடிந்தது. இதனிடையே இவர் 2009ம் ஆண்டு ஷமிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீ குமார் வீடியோ:
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமிதா வேற யாரும் இல்லைங்க, இவரும் சீரியல் நடிகை தான். இவர் வெள்ளித்திரை, சின்னத்திரையில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஸ்ரீகுமார், சாலை ஓரத்தில் குடிசை கட்டி இருக்கும் நபர்கள், ஸ்ரீ குமாரை பார்த்து தங்களுடைய நிலைமையை சொல்லி காசும் பணமும், சாப்பாடும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இயேசுவின் புகழைப் பாடி இயேசுவின் புத்தகத்தை கொடுத்து எல்லோரிடமும் கொடுத்து படிக்க சொல்கிறார்.
View this post on Instagram
நெட்டிசன்கள் விமர்சனம்:
அதற்கு பின் ஒரு 500 ரூபாயை கொடுத்து மறக்காமல் படியுங்கள் என்று சொல்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் ஒரு நல்ல செயலா? இது மதத்தைப் பரப்ப வேண்டிய நேரமா? அவர்களுக்கு உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள். இவ்ளோ பேச்சு பேசிவிட்டு வெறும் ₹500 கொடுத்திருக்கிறார். உதவி செய்வதற்கு எதற்கு கடவுள் பெயர் எல்லாம் இழுக்கிறீர்கள் என்றெல்லாம் விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.






