கல்வி நிகழ்ச்சி ஒன்றில் இக்கால படிப்பு செலவு குறித்து நடிகர் சிவகுமார் பேசியிருந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் சிவகுமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சினிமா வாய்ப்புகள் குறையை தொடங்கியவுடன் இவர் துணை வேடங்களில் நடித்து வந்தார். அதற்குப் பின் இவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். மேலும், இவருடைய மகன்கள் தான் சூர்யா, கார்த்தி.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருவருமே திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தன் தந்தையை போலவே இவர்களும் மக்கள் மத்தியில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கிறார்கள். மேலும், சிவகுமார் குடும்பம் நடிப்பை தாண்டி சமூக சேவையும் செய்து வருகிறது. அந்த வகையில் சிவகுமார் அவர்கள் தன்னுடைய பெயரில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையை 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். இதில் அவர் ஆதரவற்ற மற்றும் ஏழ்மையாக இருக்கும் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.
ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை விழா:
அதற்கு பிறகு நடிகர் சூர்யா- கார்த்தி இருவரும் இணைந்து அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது சிவகுமாரின் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையுடன் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையும் இணைந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் 45 ஆவது ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உட்பட பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் சிவகுமார் குடும்பம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி இருந்தார்கள்.
20 கோடி சம்பளம் வாங்கிட்டு 2 லட்சம் பீஸ் கட்ட கஷ்டமா இருக்கு பாட்டி..☹️ https://t.co/n6RfmIMaBg pic.twitter.com/dU2zrqxIAg
— James Stanly (@JamesStanly) July 25, 2024
விழாவில் சிவகுமார் சொன்னது:
அப்போது விழாவில் நடிகர் சிவகுமார், இங்குள்ள மாணவர்கள் எல்லோருமே என்னைத்தான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சூர்யா, கார்த்தி இருவருமே சிவகுமார் என்ற நடிகருடைய பிள்ளைகள். ஆனால், நான் தான் ஏழை தாயினுடைய மகன். அப்படித்தான் கஷ்டப்பட்டு படித்து வந்தேன். நான் பிறந்த உடனேயே என்னுடைய அப்பா இறந்துவிட்டார். எங்கள் வீட்டில் சாப்பாடு கூட கிடையாது. அந்த அளவிற்கு ரொம்ப கஷ்டம். வெறும் சோழம் தான் சாப்பிட்டு வளர்ந்தோம். பஞ்சம் வந்தால் அதுவுமே எங்கள் வீட்டில் கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உங்களுடைய பேரக் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுங்கள் 2.5 லட்சம் செலவு ஆகாது சரியா மிஸ்டர் சிவகுமார்
— Selvadurai0202 (@selvadurai0202) July 25, 2024
பேரன் கல்வி குறித்து சொன்னது:
ஒட்டகப்பால் பவுடரை சாப்பாடாக எடுத்துக் கொண்டு செல்வோம். நான் 365யிலேயே மொத்த கல்வி செலவையும் முடித்தேன். ஆனால், இப்போது கார்த்திக் மகனை பிரிகேஜி சேர்க்க இரண்டரை லட்சம் ஆகிறது. அப்போது பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க என்னிடம் ஐந்து ரூபாய் இல்லை. அதனால் புகைப்படம் கூட எடுக்க முடியாமல் போனது. இப்போது 50 கோடி புகைப்படங்களில் என்னுடைய முகம் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரே ரத்தம் தான். நாம் இமயமலையை கூட தொடமுடியும். கல்வியும் ஒழுக்கமும் தான் நம்மை இமயத்தில் ஏற்றும்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
நன்றாக படியுங்கள், வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். இப்படி இவர் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஏன் உங்கள் பேரனை இலட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்? நீங்களும் அரசாங்க பள்ளியில் படித்து தானே இந்த அளவிற்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் பேரனையும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டியது தானே, கோடி கோடியாய் சம்பாதிக்கும் உங்களுக்கு பேரனுடைய பள்ளி பீஸ் செலவு செய்ய முடியவில்லையா? என்றெல்லாம் விமர்சித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.