பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்ட் 2வில் டேமேஜ் செய்து வரும் வெங்கட் – ரசிகர்களின் குமுறல்

0
296
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட்டை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் வெங்கட் ரங்கநாதன். இவர் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் தான் நடிகர் ஆனார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ரோஜா சீரியல். இது தவிர இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார்.

- Advertisement -

வெங்கட் குறித்த தகவல் :

இதனிடையே இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவருடைய பெண்ணின் பெயர் தேஜு. இவர் தன் மகளுடன் இணைந்து விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் ஜீவா என்ற ரோலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மேலும், இந்த சீரியலில் மீனா- ஜீவா உடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. சமீபத்தில் தான் இந்த சீரியலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த வசந்த் விலகி இருந்தார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட் :

இவர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் தான் இந்த சீரியலில் விலகியதாக பேட்டி அளித்திருந்தார். இவருக்கு பதில் தற்போது செந்தில் கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். மீண்டும் செந்தில்- மீனா ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை நெட்டிசன்கள் வறுத்து எடுத்த நிலையில் நேற்று எபிசோட் குறித்த விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன் கிண்டல் :

நேற்று எபிசோட்டில் செந்தில், தன் அப்பாவின் மீது இருந்த மொத்த கோபத்தையும் மீனாவின் அப்பா, அம்மா மீது காண்பித்து ரஜினி அண்ணாமலை படம் ரேஞ்சுக்கு சவால் எல்லாம் விட்டு வந்திருக்கிறார். இதைத்தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக, முதல் நீ உன் அப்பாவை சமாளி, அதுக்கப்புறம் வந்து சவால் எல்லாம் விடு என்றெல்லாம் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்த இரண்டாம் பாகத்தில் வெங்கட் உடைய கதாபாத்திரம் சரியாக இல்லை. இப்படி இருக்கும் நிலையில் இவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்வதன் மூலம் இதுவரை இவர் சின்னத்திரையில் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பெயருமே கேள்விக்குறியாகும் போல் இருக்கிறது.

Advertisement