'சிறகடிக்க ஆசை' சீரியல் மீனாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ தினமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடர் முத்து-மீனா இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் மனோஜ், மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று விடுகிறார்.

இதை அறிந்த முத்து, வீட்டில் சொன்னவுடன் பூகம்பம் வெடிக்கிறது. ஆரம்பத்தில் மனோஜ், விஜயா இருவரும் சமாளித்தாலும் ஒரு கட்டத்தில் உண்மையை உளறி விடுகிறார்கள். இதனால் கோபப்பட்டு அண்ணாமலை, மனோஜை வெளுத்து வாங்கி இருந்தார். பின் இதற்கு காரணமான விஜயாவிடம் பேசமாட்டேன் என்று பேசாமல் இருக்கிறார். இருவரையும் சேர்த்து வைக்க மீனா ரொம்பவே போராடுகிறார். இருந்தும் வழக்கம்போல் மீனாவை தான் விஜயா திட்டிக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை:
இப்படி அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கோமதி ப்ரியா. இவருடைய சொந்த ஊர் மதுரை. வேலைக்காக சென்னை வந்தார். இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

கோமதி ப்ரியா குறித்த தகவல்:
இவர் முதன் முதலாக 2018 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த 'ஓவியா' என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்' தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார். மேலும், இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது 'சிறகடிக்க ஆசை' சீரியல் தான். இவர் மீனாவாகத்தான் அனைவர் மனதிலும் இருக்கிறார்.

சீரியலில் மீனா:
இது தவிர இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவர் பதிவிடும் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், கோமதி அவர்கள் சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு அப்பாவி பெண்ணாக நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் வரவேற்கப்பட்டாலும் சிலர் இதை கிண்டல் செய்து வருகிறார்கள். காரணம், எதற்கெடுத்தாலும் நல்லவராகவும், தியாகியாகவும் இருக்கிறார் மீனா.

நெட்டிசன்கள் விமர்சனம்:
இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் மீனா ரோலை விமர்சித்து இருக்கிறார்கள். அதில், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கிய இப்படித்தான் அடி வாங்கியும், எது நடந்தாலும், தன்னைத்தானே கஷ்டப்படுத்தி கொண்டிருப்பார். அதே போல் தற்போது மீனாவும் பாக்கியா மாறியே மாறிக்கொண்டு வருகிறார். 1 கிலோ உப்பு ஒரு நாளைக்கு சாப்பிட்டால் கூட மீனாவிற்கு சூடு சொரணையே வராது போல இருக்கு. அந்த அளவிற்கு அவர் பொறுமையாக அமைதியாக இருக்கிறார். இவர் விஜயாவை எதிர்த்து சண்டை போடும் காட்சிக்காக தான் ரசிகர்கள் பலருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.






