பொது மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா – குவியும் கண்டனங்கள்.

0
236
- Advertisement -

பொது மேடையில் நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதோடு இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். பிறகு இவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருடைய சினிமா உலகிற்கு தூக்கி விட்டது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் போன்ற பல படங்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

அஞ்சலி குறித்த தகவல்:

இதனிடையே நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருந்தது. அதோடு சினிமாவில் நுழைந்த சில ஆண்டுகளில் உடல் எடை கூட சற்று பருமனானார் அஞ்சலி. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. அதன் பின் இவர் கடும் உடற்பயிற்சிகளை செய்து ரொம்பவும் பிட்டாகா மாறி விட்டார். மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக சில காலமாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்த அஞ்சலி மீண்டும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

கம்பேக் கொடுத்த அஞ்சலி:

தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் ஜேஞ்சேர் படத்தில் அஞ்சலி கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் நடித்து இருக்கிறார். அதனை அடுத்து அஞ்சலி படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் ஃபால். இதில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படம்:

தற்போது அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி. இந்த படத்தில் விஷ்வக் சென் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கிருஷ்ணா சைதன்யா எழுதி இயக்கி இருக்கிறார். நேஹா ஷெட்டி, அஞ்சலி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தினுடைய ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெற்றிருக்கிறது. இதில் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டிருந்தார்.

நெட்டிசன்கள் கண்டனம்:

அப்போது மேடையில் படக்குழுவினர் எல்லோருமே நிற்கும் போது தள்ளி நிற்க பாலகிருஷ்ணா சொல்லி இருக்கிறார். எல்லோரும் கொஞ்சம் மெதுவாக நகர்ந்து இருக்கிறார்கள். உடனே வேகமாக அவர் அஞ்சலியை மேடையிலேயே தள்ளி இருக்கிறார். அஞ்சலியும் சிரித்துக் கொண்டு அதை சமாளித்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் பாலகிருஷ்ணா செயலை கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement