‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் புதிய கோமாளி ஒருவர் என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்தும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருந்தது பலருக்கும் பேர் அதிர்ச்சி.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:
பின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. பின் இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பின் இந்த நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன் தான் தொடங்கப்பட்டது. இந்த சீசனில் பழைய கோமாளிகளும், புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.
நிகழ்ச்சி போட்டியாளர்கள்:
அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் சோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, ஃபுட் ரிவியூவர் இர்பான், பாண்டியன் பூஜா, சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். இதில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத சில போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புது கான்செப்ட்கள் வழங்கி வருகிறார்கள். கோமாளிகளும் வழக்கம் போல் குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதோடு நடிகை ராதாவை தொடர்ந்து விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இவரை அடுத்து இந்த வாரம் மிர்ச்சி சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். வார வாரம் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து இருக்கிறார்கள்.
புது கோமாளி என்ட்ரி:
இந்த நிலையில் புதிய கோமாளி ஒருவர் நிகழ்ச்சியில் களமிறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவி பிரபலம் அசார் தான். சின்னத்திரையில் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அசார். இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இருந்தாலும் இவருக்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அதற்குப் பின் இவர் டிவிக்கு வந்துவிட்டார்.