வர்மா படத்தின் புதிய ஹீரோயின் இவங்க தான்..! இதுக்கு முதல் ஹீரோயினே தேவல.!

0
1027
Varma
- Advertisement -

தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தைத் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஈ4 தயாரிப்பு நிறுவனம் வாங்கியிருந்தது. இயக்குநர் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடித்து `வர்மா’ என்று பெயரிடப்பட்டு அந்தப் படம் தமிழில் முழுமையாக எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

கடந்த காதலர் தினத்தன்று வெளியாக இருந்த நிலையில், பாலா படத்தின் முழு படத்தை பார்த்த பட நிறுவனம் `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதற்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை’ என அறிவித்து அதிர்ச்சியளித்தது.

- Advertisement -

மேலும், துருவ் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வேறு ஒரு இயக்குனர் மற்றும் கதாநாயகியை வைத்து இந்த படத்தை முதலில் இருந்து தயாரிக்கபோவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இதனால் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்த மேகா சவுத்ரி அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் ரெட்டியின் அசோசியேட் கிரிசய்யா இந்தப் படத்தை இயக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்தூ இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாபி பெண்ணான இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement