சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கும் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு – இப்ப என்ன தெரியுமா ?

0
668
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் நடித்த “வாரிசு” படம் உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, பிரகாஷ் ராஜ் என பலர் நடடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி இருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கி, தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது வரையில் 300 கோடியை வசூல் செய்திருக்கிறது.

-விளம்பரம்-

நடிகர் விஜய்யின் தொடக்க கால சினிமாவில் அப்பா செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட், காதல், குடும்பம் என்று கதையை மையமாக கொண்ட படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது அரசியல், விவசாயம், தீவிரவாதம் போன்ற சமூக பிரச்சனைகளை சொல்லும் கதைகளில் நடித்து வருகிறார். இதனால் விஜய் குடும்ப படங்களில் நடிக்காதது ஒரு குறையாகவே விஜய் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் குடும்ப படத்தில் விஜய்யை காண விரும்பும் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வாரிசு படம் வெளியாகியது.

- Advertisement -

வாரிசுடு தெலுங்கு படம் :

இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வார்சுடு திரைப்படம் தமிழுடன் ஒரே நேரத்தில்தான் உருவாக்கியது. அப்படிபட்ட நிலையில் கடந்த சில மாதனங்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது. இது சர்ச்சையாகிய நிலையில் இதற்கு வாரிசு படம் தமிழ் படம் என்றும் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுவதாகவும், படத்தை இரண்டு நாட்கள் தள்ளி வெளியிடுவதாகவும் கூறினார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு.

புதிய சர்ச்சை :

மேலும் இந்த சர்ச்சை முடிவுக்கும் வருவதற்குள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை ஆரம்பித்து. இந்த சர்ச்சையினால் தில் ராஜு நெட்சன்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த பிரச்னை சற்றே ஒய்ந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர் தில் ராஜு அதாவது இவர் அடுத்தாக தெலுங்கு முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டாவை வைத்து படம் இயக்க போவதாக அதிகாரபூர்வமாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். இதனால் தான் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

-விளம்பரம்-

சர்ச்சைக்கு காரணம்

விஜய் தேவரகொண்ட நடித்த “கீதா கோவிந்தம்” என்ற படத்தை பிரபல தெலுங்கு அல்லு அர்ஜுனின் அப்பாவான அல்லு அரவிந்த் விநியோகம் செய்திருந்தார். அவர் கீதா கோவிந்தம் படத்தின் இயக்குனர் பரசுராமிடம் பெரும் தொகையை பத்ம இயக்குவதற்காக கொடுத்திருந்தார். ஆனால் திடீரென அல்லு அரவிந்திற்கு படம் இயக்காமல் தில் ராஜுவின் படத்தை இயக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் இதுதான் சர்ச்சைக்கு கரணம். இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷியத்தை பேசி முடித்துக்கொள்ள சொன்னதால் இந்த சர்ச்சை தற்போது தணிந்திருக்கிறது.

Advertisement