அந்த பிரச்னைய எப்படி எதிர்கொள்ளணும்னு தெரியாம ஊருக்கே திரும்பிப் போயிருக்கேன் – செய்தி வாசிப்பாளர் கண்மணி.

0
492
kanmani
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பிரபலமாகி வருகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பல சுவாரசியமான விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, என்னுடைய சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம்.

-விளம்பரம்-

எங்க ஊரைப் பொறுத்த வரைக்கும் பெண் பிள்ளைகள் யாரும் பெரிய அளவில் வெளியூரில் தங்கி படித்து வேலை எல்லாம் பார்ப்பது கிடையாது. எங்கள் ஊர் அருகில் இருக்கிற காலேஜில் தான் பெரும்பாலும் படிப்பார்கள். நான் மீடியா தேர்வு செய்ததனால் சென்னையில் தங்கி படிக்க போறேன் என்று சொன்னேன். ஆனால், என் வீட்டில் எந்த தடையும் சொல்லவில்லை. நான் ஆசைப்பட்ட மாதிரியே மீடியா படிப்பை படிக்க வைத்தார்கள். என் மேல நம்பிக்கை வைத்து என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். இப்போ வரைக்கும் நான் அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டு தான் வருகிறேன்.

- Advertisement -

முதன் முதலாக கிடைத்த வாய்ப்பு:

இதை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. நான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே ரிப்போர்ட்டிங்கிற்காக நிறைய சேனலில் இன்டர்ன்ஷிப் பண்ணி இருந்தேன். அப்போது செய்தி எப்படி படிக்கிறார்கள்? செய்தியை எப்படி கலக்ட் பண்ணுகிறார்கள் என்று எல்லாம் நன்றாக கற்றுக் கொண்டேன். ஒருநாள் காலேஜில் நியூஸ் ரிடிங்காக ஆடிசன் நடந்தது. எனக்கு சரளமாக வாசிக்கும் பழக்கம் இருந்தால் அந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதில் செலக்ட் ஆகி முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நான் நியூஸ் ரீடராக பயணத்தை ஆரம்பித்தேன்.

கண்மணி

பிரச்சனை என்றால் ஓடிப்போய் விடுவேன்:

ஒரு வாரம் என்னை நியூஸ் எப்படி பண்ணுவது என்று பார்க்க சொன்னார்கள். அதற்கு பிறகுதான் நியூஸ் வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நிறைய தப்பு பண்ணி இருக்கேன். பின் என்னை நானே சரி செய்து கொண்டேன். இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வேலை பார்த்த எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் வந்து இருக்கு. எனக்கு அந்த அளவிற்கு பக்குவம் இல்லை. அதோடு ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளனும் என்று கூட எனக்கு தெரியாமல் ஊருக்கு ஓடிப்போய் விடுவேன். பிறகு இது நமக்கு பிடித்த துறை. இதை விட்டுவிடக்கூடாது, முயற்சி செய்யணும் என்று நம்பிக்கையோடு திரும்பி வந்து எல்லாம் வேலை தேடி இருக்கிறேன்.

-விளம்பரம்-

என் அப்பா மீது தான் பயம்:

அது மட்டுமில்லாமல் எங்கள் ஊரிலேயே நான் தான் முதன் முதலாக வெளியே வந்து படித்து மீடியாவிற்குள் நுழைந்தது. இப்போது ஊரே என்னை ஒரு செலிபிரிட்டி ஆக பார்க்கிறது. எங்க அப்பா ஊர்த்தலைவர். அதனால் எல்லோரும் தலைவரோட பொண்ணு மாதிரி நீயும் படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டு என் அப்பாவும், அம்மாவும் பூரித்துப் போய் இருக்கிறார்கள். தினமும் நான் நியூஸ் வாசித்து முடித்ததும் என்னுடைய அப்பா போன் வரும். இன்னைக்கு ஏன் இந்த டிரஸ் போட்ட? மேக்கப் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கு? இன்னைக்கு ஏன் கொஞ்சம் சொதப்பின? என எல்லா விஷயத்தையும் கவனித்து சொல்லுவார்.

Kanmani Sekar Bio: Age, Height, and Family| CelebSecrets.in

படங்கள், சீரியல்கள் வாய்ப்பு:

அதனால் நான் சேனலுக்கு பயந்ததை விட என் அப்பாவுக்கு பயந்து தான் அதிகம். அதேபோல் நன்றாக இருந்ததையும் அவர் மறைக்காமல் மனம்விட்டு பாராட்டுவார். மேலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியும் ஏதோ ஒரு வித சந்தோஷத்தையும் துக்கத்தையும் கொடுக்கும். அதே போல் எனக்கு படங்கள், சீரியல் என்று வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், எனக்கு நியூஸ் ரீடர் தான் நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த துறை.

அதனால் அதை விட்டுட்டு வேறு ஒரு துறையில் வேலை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இன்னும் இந்த துறையில் கற்றுக்கொண்டு சாதிக்க வேண்டும். எங்களை எங்களை மாதிரி ஆட்களை அடையாளம் கண்டு பாராட்டும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. இந்த அடையாளம் நிரந்தரமாக இருக்க நான் கடுமையாக உழைத்தேன் என்று புன்னகையுடன் கூறியிருந்தார்.

Advertisement