சூப்பர் ஹிட் தமிழ் சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் – அவரே வெளியிட்ட புகைப்படம். 

0
1309
kanmani
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பிரபலமாகி வருகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அந்த வகையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு மீடியாவில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவருடைய வீட்டில் ஆரம்பத்தில் மீடியாவிற்கு எதிர்ப்பு இருந்தாலும் பின் எப்படியோ சம்மதம் வாங்கி படித்தார். பிறகு படித்துக் கொண்டிருக்கும்போதே நியூஸ் ரிடிங் ஆடிஷனில் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

அதன் மூலம் இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் நியூஸ் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இதன் மூலம் இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம்.

- Advertisement -

கண்மணி திருமணம் பற்றிய தகவல்:

இந்நிலையில் கண்மணி பற்றி ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கண்மணி சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். அவர் வேற யாரும் இல்லைங்க, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் நவீன் தான். இவர்கள் இருவரும் தான் திருமணம் செய்யப் போகிறார்கள். நடிகர் நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் நவீனின் திரைப்பயணம்:

இவர் முதன் முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் தான் நடிகராக நடிக்க தொடங்கினார்.
அதன் பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதோடு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டாப் ரேட்டிங்கில் ஒன்றாக இதயத்தை திருடாதே உள்ளது.

-விளம்பரம்-

இதயத்தை திருடாதே சீரியல் கதை:

மேலும், இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீனம், சகானா என்ற கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும் நடித்து வருகிறார்கள். தற்போது சீரியலில் சிவா, சகானா இருவரும் சேர்ந்து தாங்கள் கட்டப்போகும் கட்டிடத்திற்கான அலுவலகத்தை திறந்து இருக்கிறார்கள். கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை எடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதை ராஜேஸ்வரி என்ற வில்லி தடுக்க பல முயற்சிகளைச் செய்கிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் நவீனும், செய்தி வாசிப்பாளர் கண்மணியும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நவீன்-கண்மணி திருமணம்:

அது மட்டுமில்லாமல் நவீன் குடும்பமும், கண்மணி குடும்பமும் நீண்ட கால நண்பர்களாம். இது காதல் திருமணம் இல்லை இரு வீட்டிலும் பேசி முடிவு செய்யப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. இதை நவீனும், கண்மணியுமே தங்களுடைய சோசியல் மீடியாவில் உறுதி செய்திருக்கிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர சர்ப்ரைஸாக உள்ளது. இருவருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய திருமணம் எப்போது? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

Advertisement