பிரியா பவானி சங்கரை போல நடிப்பிற்காக வேலையை விட்ட செய்தி வாசிப்பாளர். பேஸ்புக் மூலம் அடித்த இன்னோரு நடிகையின் வாய்ப்பு.

0
6583
dhivyaduraisami

செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது செய்தி வாசிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் படு பிசி. அதே போல பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘2.0’, ‘தளபதி’ விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘காப்பான்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது நடிகையாக ‘மாஸ்டர்’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் அனிதா சம்பத்.

பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத் எப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அவதாரம்எடுத்தார்களோ, அதே போல் இன்னொரு பிரபல செய்தி வாசிப்பாளரும் அந்த ரூட்டில் பயணிக்க துவங்கிவிட்டார் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி.பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா துரைசாமிக்கு, அவங்க ஸ்கூல் படித்து கொண்டிருந்த டைம்லையே டான்ஸ் ஆடுவது தான் ரொம்ப பிடிக்குமாம். படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் என்ட்ரியாவோம் என்று நினைத்துக் கூட பார்க்காத திவ்யா துரைசாமி, படித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார்.

- Advertisement -

இப்போது புதிய தலைமுறை என்ற சேனலில் நியூஸ் ரீடராக வலம் வருவதோடு, ‘டென்ட் கொட்டாய்’ என்ற சினிமா ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறாராம் திவ்யா துரைசாமி. கடந்த சில காலமாகவே இவரது போட்டோ ஷூட்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது அம்மணி நடிகையாக எல்லா வாய்ப்புகளையும் தேடிக்கொண்டு இருக்கிறாராம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திவ்யா, தனது செய்தியாளர் டூ நடிகை பயணம் குறித்து பேசுகையில், சென்னைல இருக்கற ஒரு செய்தி சேனல் விடாம எல்லா நியூஸ் சேனல்லையும் வேலைபார்த்துட்டேன். அப்படி கடைசியா ஒரு சேனல்ல வேலை பார்க்கும்போது ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. படத்தில் நான் மா.கா.பா ஆனந்துக்கு ஜோடியா நடிச்சிருப்பேன். இந்த கேரக்டருக்கு வேற ஒரு பொண்ணுதான் முதலில் கமிட்டாகி, சில காட்சிகள் எடுத்திருக்காங்க.

-விளம்பரம்-

அது செட்டாகலைனு டைரக்டர் ரஞ்ஜித் ஜெயக்கொடி ஃபீல் பண்ணதால, அவரோட உதவி இயக்குநர் ஃபேஸ்புக்ல இருந்த என் போட்டோவைக் காட்ட அப்படித்தான் இந்த வாய்ப்பு வந்தது. இந்த படத்திற்கு எனக்கு கிடைத்த வரவேற்பால் என் வேலையும் விட்டுட்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கேன். தற்போது பாலாஜி சக்திவேல் சாரோட அடுத்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிச்சிருக்கேன். அவர் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு, கல்லூரி படத்தில் தமன்னாவை பார்க்கும் போது இந்த பொண்ணு பெரிய ஆள வருவான்னு தோணுச்சு. இப்போ உன்ன பாத்து தோணுது, நீயும் பெரிய ஆள வருவேன்னு சொன்னார் என்று பூரித்து போய் கூறியுள்ளார்.

Advertisement