அஜித்திற்கு கை கொடுத்து தூக்கிவிட்ட நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி மரணம் – இவருக்கு இப்படி ஒரு கொடிய நோயா.

0
455
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். முதன்மை நடிகராக மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வலம் வந்து கொண்டிருக்கும் உன்னத நடிகர் தான் அஜித். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என்றால் அவருள்ளே இருந்தே அந்த விடாமுயற்சி எண்ணம் தான். ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் ரசிகர்களின் ஆதரவால் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க முடிந்தது.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட ஆசை படம் தான் அஜித்திற்கு பெரிய திருப்புமுனையாக இருந்த படம். தொடர்ந்து ஒரு சாக்லேட் பாயாக சார்மிங் பாயாக வலம் வந்தவர் பல ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அஜித்தின் வளர்ச்சிக்கு ஒரு பக்கம் உறுதுணையாக அமைந்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தான்.இதன் காரணமாக ரசிகர்கள் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் அஜித்தின் சொந்த நிறுவனமா என்று கேட்கும் அளவுக்கு கூட இருந்தது.

- Advertisement -

 1997ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தை தயாரித்தார் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இது தான் நிக் ஆர்ட்ஸ் பேனரில் அஜித் நடித்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு என்று அஜித்தின் பல்வேறு திரைப்படங்களை நிக் ஆர்ட்ஸ்  தயாரிப்பு நிறுவனம் மூலமாக எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். 

அஜித் மற்றும் எஸ் எஸ் சக்கரவர்த்தி கூட்டணியில் உருவான பல திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. இதனாலேயே நிக் ஆர்ட்ஸ் பேனரில் வெளியாகும் அஜித் படங்களுக்கு ஒரு தனி பிசினஸ் இருந்து வந்தது. ஆனால், இடையில் எஸ் எஸ் சக்கரவர்த்தியுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக நிக் ஆர்ட்ஸ் பேனரில் பணியாற்றுவதை நிறுத்தினார் அஜித். இறுதியாக 2006 ஆம் ஆண்டு வெளியான வரலாறு படம் தான் அஜித் நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அஜித்தை பிரிந்த பின்னர் எஸ் எஸ் சக்கரவர்த்தி சிம்புவை வைத்து காளை படத்தை வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ரேணிகுண்டா, 18 வயசு, வாலு போன்ற படங்களை தயாரித்தார். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தபடத்தையும் தயாரிக்காமல் இருந்த எஸ் எஸ் சக்கரவர்த்தி இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகிய மாபெரும் பிட் அடித்த விலங்கு வெப்சீரியஸ்ஸை தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் அண்மையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக  கடுமையாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் இவர் உயிரிழந்துள்ளார். இவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்கிற்கு அஜித் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement