பிரியங்கா சோப்ரா கணவர் கையில் கட்டி இருக்கும் வாட்ச் எத்தனை கோடி தெரியுமா ?

0
1445
- Advertisement -

பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முடி சூடா ராணியாக இருந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் மிஸ் இந்தியா என்ற படத்தை வென்றவர். இவர் தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். பின் அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய மாதம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. பின் இவர் அமெரிக்காவிலேயே குடியேறினார்.

-விளம்பரம்-

இவர் சொகுசான ஆடம்பர வாழ்க்கை புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி வீட்டை தன் கணவருடன் சேர்ந்து ரூ.144 கோடிக்கு வாங்கினார்.

- Advertisement -

இந்த வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியல் அறைகள், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், பார், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் உள்ளன. பின் இவர் புதிதாக ரூ.3 கோடிக்கு சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுபோல் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் விலை உயர்ந்த ஆடைகள், செருப்பு, நகைகளை மட்டும் தான் அணிந்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோல்டன் குளோப் விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தன் கணவர் நிக் ஜோனசுடன் கலந்து கொண்டார்.

அப்போது பார்வையாளர்கள் கவனம் முழுவதும் நிக் ஜோனஸ் அணிந்திருந்த கடிகாரம் பக்கம் தான் இருந்தது. அந்த கடிகாரம் தங்கத்தினால் செய்யப்பட்டு இருந்தது. அந்த கடிகாரத்தில் நிறைய வைர கற்களும் பதிக்கப்பட்டு இருந்தன. அதுமட்டும் இல்லாமல் இது உலகிலேயே அதிக விலை கொண்ட கைக்கடிகாரம் என்று பேசப்பட்டது. தற்போது அந்த கடிகாரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement