கேரளத்து நடிகை நித்யா மேனன் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து அந்த மீண்டும் சினிமாவில் ரீஎன்ரி கொடுத்தார். ‘அவே’ என்ற படத்தில் மிகவும் தைரியமாக லெஸ்பியன் கேரக்டரில் நடித்திருந்தார்.
தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார்.பொதுவாக உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சிகளிலோ பெரிதாக நாட்டம் இல்லாத இவர், கடந்த சில மாதங்களாக உடல் எடை கூடி பருமனாக ஆகிவிட்டார்.
சமீபத்தில் இவர் குண்டாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவ அதனை பலரும் கிண்டல் செய்தனர் ஆனால் நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய தவறுயில்லை. நான் குண்டாக இருப்பது ஒருநாளும் எனக்கு தடையாக இருந்ததில்லை படங்களுக்காகவே நான் அப்படி இருந்தேன்.
ஆனால் இனி வரும் படங்களில் நான் கண்டிப்பாக மெலிந்தே காணப்படுவேன்என்று கூறியிருந்தார். அதற்காக சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு வந்தார் நித்யா மேனன். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.