படு ரொமான்டிக்காக காதலை தெரிவித்துள்ள நடிகரின் காதலை ஏற்றுக்கொண்ட காதலி. யார் தெரியுமா ?

0
26082
nikhil
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் நிகில் சித்தார்த் ஒருவர். நடிகர் நிகில் சித்தார்த் அவர்கள் தெலுங்கு சினிமா உலகில் நல்ல கதைகளை கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலேயே இவர் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானர். நிகில் சித்தார்த் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்தில் தான். அவருடைய பள்ளிப் படிப்பு, காலேஜ் அனைத்தையும் ஹைதராபாத்தில் தான் முடித்து உள்ளார். இவர் முதலில் துணை இயக்குனராக தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

-விளம்பரம்-
Image result for nikhil siddharth engagement photos"

அதற்குப் பிறகு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது டோலிவுட்டில் பிரபலமான நடிகராக மாறி விட்டார். தற்போது இவர் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த கார்த்திகேயா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் நடித்து சூப்பர் ஹிட்டான கார்த்திகேயா 2 படத்தின் வேலைகளை தொடங்கி உள்ளார். தற்போது இவர் நடித்து உள்ள புது படம் குறித்து கூடிய விரைவில் தகவல்கள் வெளியாகும்.

- Advertisement -

இந்நிலையில் இவர் தன்னுடைய வருங்கால துணையை குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். மேலும், நடிகர் நிகில் சித்தார்த் மற்றும் பல்லவி வர்மா ஆகியோர் நிச்சியதார்த்தத்தம் பாரம்பரிய முறையில் நடந்தது. இவர்கள் இருவரும் தங்களுடைய மோதிரங்களைய மாறி மாறி பரிமாறிக்கொண்ட போது எடுத்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. நடிகர் நிகில் சித்தார்த் அவர்கள் பல்லவி வர்மாவை காதலித்து வந்து உள்ளார். பல்லவி வர்மா மருத்துவ துறையில் பணி புரிகிறார். நடிகர் நிகில் சித்தார்த் அவர்கள் தனது காதலை பல்லவிக்கு சொல்வதற்காக கோவாவிற்கு அழைத்துச் சென்று உள்ளார்.

View this post on Instagram

SHE SAID YESS… Next Adventure In Life ??

A post shared by Nikhil Siddhartha (@actor_nikhil) on

கோவாவில் நடுக்கடலில் நிகில் சித்தார்த் தனது காதலை அழகாக பல்லவிக்கு கூறி உள்ளார். அதற்கு டாக்டர் பல்லவி வர்மாவும் சம்மதம் தெரிவித்து உள்ளார். இவர் தற்போது தனது வருங்கால மனைவியை தேர்வு செய்து உள்ளதாக கூறி உள்ளார். இவர் தன்னுடைய காதலிக்கு லவ் ப்ரோபோசல் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரமித்துப் போய் நடிகர் நிகில் சித்தார்த்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பின் இவர்கள் இருவரின் வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள். மேலும், இவர்களுக்கு ஏப்ரல் 16-ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement