பிரபுதேவாவை திருமணம் செய்ய நான் ரெடி..! பிரபல நடிகை அதிரடி முடிவு..! புகைப்படம் உள்ளே

0
3997

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் நடன புயல் பிரபு தேவா, நாளுக்கு நாள் மன்மதனாக மாறிவருகிறார். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தகப்பனான பிரபு தேவா சில ஆண்டுகளுக்கு முன்னர் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து சுத்தியை கதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது பிரபு தேவாவை நான் திருமணம் செய்து கொள்ள தயார் என்று ஒரு இளம் நடிகை கூறியுள்ளார்.

Nikesha_Patel

- Advertisement -

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான கௌதம் கார்த்திக் நடித்த “என்னமோ எதோ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நீக்கீஷா படேல் . மேலும் தமிழில் “தலைவன்”, “நாரதன்”, “7 நாட்கள்” போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கஸ்தூரி ராஜா இயக்கி வரும் “பாண்டிமுனி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை நீக்கீஷா படேல் “தனக்கு பிரபு தேவா என்றால் மிகவும் பிடிக்கும், அவரது குடும்பமும் எங்களது குடும்பமும் நட்பாக பழகி வருகின்றனர். பிரபு தேவாவை நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

27 வயதாகும் இந்த இளம் நடிகை லண்டனில் குஜராத் குடும்பத்தில் பிறந்தவர். மேலும், 5 மிஸ் இந்தியா லண்டன் பட்டத்தை வென்ற இவருடைய தற்போதை மதிப்பு மட்டும் சுமார் 20 கோடி. தமிழ், தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துவரும் நீக்கீஷா படேல் தற்போது தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.