வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் என்பவர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை நிக்கி கல்ராணி – என்ன காரணம் பாருங்க.

0
430
nikki
- Advertisement -

தனது வீட்டில் திருடிய 19 வயது இளைஞனை பிரபல நடிகை ஒருவர் துரத்திய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நிக்கி கல்ராணி. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு மாடலும் ஆவார். பின் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த டார்லிங் என்ற படத்தின் மூலம் தான் நிக்கி கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், டார்லிங் படத்திற்கு முன்பாகவே கன்னடம் மற்றம் மலையாளம் என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் வெளிவந்த படம் ராஜவம்சம். இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகி பாபு, தம்பி ராமையா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள்.

- Advertisement -

ராஜவம்சம் படம்:

இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட படமாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது. மேலும், நடிகர் சசிகுமார் உடைய ராஜவம்சம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாக ராஜவம்சம் இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அதோடு நிக்கி கல்ராணி அஜித் நடித்துள்ள வலிமை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு சொகுசு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பின் இந்த வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவரை நியமித்தார் நிக்கி. இந்த நிலையில் இவரது வீட்டில் 19 வயது கொண்ட தனுஷ் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனுஷ் நிக்கி கல்ராணியின் வீட்டில் உள்ள பொருட்களை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றார்.

-விளம்பரம்-

காவல் நிலையத்தில் புகார் அளித்த நிக்கி கல்ராணி:

அதை பார்த்த நிக்கி கல்ராணி தனுசை துரத்திப் பிடிக்க .சென்றார். இருந்தும் அந்த வேலை செய்த தனுஷ் நிக்கியிடம் இருந்து தப்பித்து விட்டார். இந்த நிலையில் இது குறித்து நிக்கி கல்ராணி சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் நிக்கி கல்ராணி தன்னுடைய ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கேமரா திருடி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதனிடையே அதே அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிக்கி கல்ராணி மீது செல்லத்துரை என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நிக்கி கல்ரானிக்குக் கரோனா தொற்று உறுதி | nikki galrani tests positive for  corona - hindutamil.in

போலீசிடம் பிடிபட்ட திருடன்:

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்க்கும் தனுஷை நடிகை நிக்கி கல்ராணி சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார் என்றும் தனுஷின் பெற்றோர்கள் தன்னிடம் உதவி கேட்டு உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 13ம் தேதி தனுஷின் தாய் மற்றும் தந்தை இருவரும் விருதாச்சலத்தில் இருந்து சென்னை வந்து தன் மகனை காணவில்லை என்ற புகாரை காவல்நிலையத்தில் அளித்திருக்கிறார்கள். இதனையடுத்து போலீசார் நிக்கி கல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தனுஷ் பொருள்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

பறிமுதல் செய்த பணம், பொருட்கள்:

மேலும், தனுஷ் திருப்பூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் திருப்பூர் சென்று தனுஷை கைது செய்தனர். பின் தனுஷிடம் இருந்து நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய 1.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தன்னுடைய பொருள்கள் திரும்ப கிடைத்ததால் தனுஷ் மீது கொடுத்த வழக்கை வாபஸ் செய்வதாக நிக்கி கல்ராணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement