நிக்கி கல்ராணியா இது.! வியந்த ரசிகர்கள்.! அவரே பகிர்ந்த புகைப்படம்.! #10yearschallenge

0
618

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் #10yearschallenge என்ற புதிய சவால் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இதில் அனைவரும் 10 வருடங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தியும் ஒன்றாக இணைத்து பகிர்ந்து வந்தனர்.

இளசுகள் மத்தியில் வைரலாக பரவிய இந்த புதிய சவால் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் படு வைரலாக பரவியது. இதனால் பல்வேறு நடிகர் நடிகைகளும் தாங்கள் 10 வருடத்திற்கு முன்னாள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

கிட்டத்தட்ட அணைத்து நடிகர் நடிகைகளும் இந்த சவாலை ஏற்கனவே ஏற்று வந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான நிக்கி கல்ராணியும் இந்த சவாலை ஏற்றுள்ளார். மலையாள நடிகையான இவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

கடைசியாக பிரபுதேவாவுடன் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்தந்தார். சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணி 10 வருடத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தற்போதுள்ள புகைப்படத்தையும் இணைத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நிக்கி கல்ராணியா இது என்று வியந்து பார்த்து வருகின்றனர்.