படு தோல்வி தந்த வடிவேலுவின் எலி படம், எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்ட இயக்குனர் – எந்த படம் தெரியுமா?

0
527
- Advertisement -

நடிகர் வடிவேலு நடித்த ‘எலி’ படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில், அப்படத்தைப் பற்றி சில தகவல்கள் தான் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவானாக திகல்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இவரை ராஜ்கிரண் தான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தெரிந்தது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் படத்தில் காமெடியாக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம் ’23ஆம் புலிகேசி’. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தில் நடித்த வடிவேலு, அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து அரசியலுக்குள் நுழைந்தார்.

- Advertisement -

எலி படம்:

இந்த நிலையில் வடிவேலுக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனது. பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான ‘தெனாலிராமன்’ படம் குழந்தைகளை கவர்ந்தாலும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று கூறலாம். தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் தான் மீண்டும் வடிவேலுவை வைத்து ‘எலி’ படத்தை இயக்கினார்.இப்படத்தின் டைட்டிலும், வடிவேலின் ஹேர் ஸ்டைலும், வடிவேலின் கெட்டப்பும் எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில் இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.

இருகப்பற்று வெற்றி:

இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். 1960 களின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் எலி. எலி படத்தின் தோல்வியை அடுத்து எட்டு ஆண்டுகளாக யுவராஜ் தயாளன் எந்த படமும் இயக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவராஜ் இயக்கிய ‘இருகப்பற்று’ கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதனை அடுத்து எலி படத்தில் தோல்விதான் தன் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று நேர்காணல் ஒன்றில் யுவராஜ் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

எலி படம் தோல்வி குறித்து:

அதாவது, எலி படத்தின் சிறப்புக் காட்சி பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. படம் முடிந்த நிலையில், படம் எப்படி இருக்கிறது என வடிவேல் சொல்லி யுவராஜ் கேட்டிருக்கிறார். எந்த ஒரு பதிலும் திரும்ப வராத நிலையில் படம் நல்லா இல்லை என்று புரிந்து கொண்டார்கள். அங்கிருந்து காரில் வடிவேலு உடன் கிளம்பிய யுவராஜ் சிறிது தூரத்தில் இறங்கியுள்ளார். அப்போது சினிமாவில் தலை காட்ட முடியாமல் போனவர், எட்டு வருடங்களுக்குப் பிறகு ‘இருகப்பற்று’ என்னும் பிளாக்பஸ்டர் படத்தை யுவராஜ் கொடுத்துள்ளார்.

யுவராஜ் தயாளன்:

தமிழ்நாட்டின் செங்கல்பட்டை சேர்ந்தவர் யுவராஜ். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ திரைப்படத்தை எம். ராஜா இயக்கிய போது அவரிடம் உதவி இயக்குனராகவும், ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கிய போது அவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் போட்டோ போட்டி, தெனாலிராமன், எலி, இருகப்பற்று போன்ற திரைப்படங்களையும் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார்.

Advertisement