கழட்டிவிட்ட விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் சீரியலில் களமிறங்கிய ரஷிதா – ஹீரோ யார் தெரியுமா ?

0
801
rachitha
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் சமீப காலமாக ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமாக போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் பல சீரியல்கள் டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சீரியல்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, குறிப்பிட்ட சேனல் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர், நடிகைகள் தற்போது வேறு வேறு சேனலுக்கு மாறியும் வருகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் டிவியிலிருந்து கலர்ஸ் தமிழ் சேனலுக்கு நடிகர்,நடிகை சென்று உள்ளனர்.

-விளம்பரம்-

தற்போது கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியலாக இது சொல்ல மறந்த கதை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் மார்ச் 7 ஆம் தேதி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும், இதற்கான புரோமோ எல்லாம் வெளியாகி இருக்கிறது. அதில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாலின வேறுபாடுகளை, ஆண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு சமையல் கற்றுக் கொண்டு திருமணம் செய்ய வேண்டும் போன்ற காட்சிகள் எல்லாம் காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

இது சொல்ல மறந்த கதை சீரியல்:

திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் என்று பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது. பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக ரக்ஷிதா நடிக்கிறார்.

இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

தன் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு பல போராட்டங்களை சந்தித்து வாழும் பெண்ணின் கதை. இதனை தொடர்ந்து இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் சத்யா என்ற தொடரில் விஷ்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் கலர்ஸ் தொடரில் நடிக்க இருப்பதால் இவர் சத்யா சீரியலில் தொடர்வாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய காரணம் சொன்ன ரக்ஷிதா:

அதேபோல் ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். பின் இவர் திடீரென்று சீரியலில் விலகியதை குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலிருந்து இனி நான் இல்லை. சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதனால் தயவு செய்து இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

ரக்ஷிதா-விஷ்ணு சேர்ந்து நடிக்கும் சீரியல்:

பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன்.இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன். என்று கூறி இருந்தார். இப்படி இவர்கள் இருவரும் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் ஜோடி சேருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சீரியலில் தீபா சங்கரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Advertisement