சன் டிவியில் ஏற்பட்ட பிரச்சனை, நேரில் அழைத்து அம்மா செய்த செயல் – நிர்மலா பெரியசாமி உருக்கம்.

0
87
- Advertisement -

றைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் உங்கள் சாய்ஸ் உமா, மியூசிக் ஆனந்த் கண்ணன், விஜய சாரதி, அர்ச்சனா, சுவர்ணமால்யா போன்ற பல பேர் பிரபலமாகி இருக்கிறார். அதேபோல் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபு, சுஜாதா, ரத்னா சிவராமன் ஆகியோரும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நிர்மலா பெரியசாமி. இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் என்று சொல்லாம். இவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். செய்தி வாசிப்பின் போது இவர் சொல்லும் வணக்கம் தான் இவருக்கான அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கித் தந்தது. இவர் சொல்லும் வணக்கத்தை கேட்டு விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார்கள். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

- Advertisement -

நிர்மலா பெரியசாமி பேட்டி :

இவர் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி என பல தமிழ் சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நிர்மலா பெரியசாமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், பொதுவெளியில் என்னை பார்க்கும் மக்கள், உங்களுடைய புடவையை பார்ப்பதற்காகவே நியூஸ் பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். அதே போல் ஆள் பாதி, ஆடை பாதி என்ற பழமொழி இருப்பதால் நான் நன்றாக ஆடை போட ஆரம்பித்தேன்.

செய்தி வாசிப்பு குறித்து சொன்னது:

இதனால் மக்கள் மத்தியில் எனக்கு பாராட்டுகள் கிடைத்தது. ஒரு கட்டத்தில் நான் கட்டிய சேலையை திரும்பி கட்ட மாட்டேன். அப்படியே கட்டும் சூழ்நிலை வந்தால் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கட்டுவேன். அந்த அளவிற்கு என்னை யாரும் எளிதில் கண்டுபிடிக்க கூடாது என்று செய்வேன். மேலும், செய்தி வாசிப்புக்காகவே நான் 500 முதல் 600 வரை புடவைகள் வைத்திருந்தேன். அதற்கு பிறகு தான் இந்த புடவைகள் எல்லாம் பிறருக்கு கொடுத்து விட்டேன். மேலும், எனக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

ஜெயலலிதா குறித்து சொன்னது:

ஒருமுறை சன் டிவி சேனல் தரப்புக்கும் எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நான் சன் டிவியில் இருந்து விலகி விட்டேன். அதற்கு பிறகு தான் நான் மற்ற சேனலுக்கு வேலைக்கு போயிருந்தேன். அப்போது எனக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசுவதற்கு பலருமே பயப்படுவார்கள், பக்தியோடு பேசுவார்கள். ஆனால், நான் எப்போது போல கேஷுவலாக தான் அவரிடம் பேசினேன். அவரும் ரொம்ப நன்றாக பேசினார். என் குடும்பம், வேலை, என்ன ஜாதி என எல்லாத்தையுமே விசாரித்தார். ஒரு 55 நிமிடத்திற்கு மேல் நாங்கள் பேசி இருந்தோம். அவர் இவ்வளவு அழகாக பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஜெயலலிதா இறப்பு குறித்து சொன்னது:

பின் உங்களுடைய லட்சியம் என்ன என்று கேட்டார். அதற்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. ஒரு வேலை உங்களுடைய லட்சியம் அரசியலாக இருந்தால் அதிமுகவுக்கு வரலாம் என்றார். நீங்கள் செய்தி வாசிப்பதை நான் பார்த்துவிட்டு தான் செல்வேன். உங்களுக்கு ஜெயா டிவியில இருந்து அழைப்பு வந்ததா? என்று கேட்டார். அதற்கு நான், இல்லை யாரும் அழைக்கவில்லை அம்மா என்றேன். அவருக்கு ஒருவரை பிடித்து விட்டது என்றால் தலை முதல் கால் வரை பார்த்து ரசிப்பார். ஆனால் பிடிக்கவில்லை என்றால் முகத்தை கூட திரும்பி பார்க்க மாட்டார். அம்மா எவ்ளோ அழகு! பிரம்மன் பார்த்து பார்த்து செதுக்கி வைத்த தங்க சிலை. ஆனால், அவருடைய இறப்பு இன்னமும் விடை தெரியாத ரகசியங்களாகவே இருக்கிறது. ஜெயலலிதா அம்மா இறப்பை நினைத்தால் என் மனம் உள்ளே கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement