சிப்பு முதல் சித்து வரை – சின்னத்திரையை கலக்கும் டாப் 10 சீரியல் ஹீரோக்கள் லிஸ்ட். மிஸ்ஸான விஜய் டிவி சீரியல் நடிகர்

0
910
serialactor
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை சீரியல்களை அதிகம் விரும்பி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் மவுசு உண்டு.

-விளம்பரம்-
Tamil TV Serials weekly TRP Ratings 2021| Vijay tv | Sun Tv | Vijay vs Sun | @Ada Dai - YouTube

அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. மேலும், சின்னத்திரை சீரியல் நடிகர்கள் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வகையில் தங்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், தாங்கள் அடிக்கடி எடுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க ஒவ்வொரு வருடமும் வெள்ளித்திரையில் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பட்டியல் வெளி வருவது உண்டு. தற்போது அந்த வரிசையில் சின்னத்திரை நடிகர்களின் பட்டியலும் இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

டாப் 10 சீரியல் நடிகர்கள் பட்டியல்:

இதற்கெல்லாம் காரணம் சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தது தான். மேலும், அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகளின் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த முதல் 10 சீரியல் நடிகர்களின் பட்டியல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டாப் 10 இடத்தில் உள்ள நடிகர்களின் பட்டியல் இதோ,

1.விஷ்ணு:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சத்யா. இந்த சீரியல் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் ஹீரோவாக விஷ்ணு நடிக்கிறார். இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றார்கள். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Vishnu Kumar Wiki, Age, Biography, Height, Weight, Serials, Family, Photos

2. சிபு சூரியன்:

சன் டிவியில் வெற்றி மாலை சூடி கொண்டிருக்கும் சீரியல் என்றால் ரோஜா. தற்போது இது 1000 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் கதாநாயகனாக வருபவர் தான் சிபு சூரியன். இந்த சீரியல் மூலம் தான் இவர் தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானார். இருந்தாலும் இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ரோஜா சீரியல் ஹீரோவுக்கு திடீர் திருமணம்?.... அதிர்ச்சியில் ரசிகைகள் ! | sun tv famous roja serial actor sibbu suryan get married? - Tamil Filmibeat

3.விக்ரம் ஸ்ரீ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த சீரியல் சிவா மனசுல சக்தி. இந்த சீரியலின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ரம் ஸ்ரீ. தற்போது இவர் ஜீ தமிழில் அன்பே சிவம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உள்ளது.

Vikram shri (@vikram_np) / Twitter

4.அக்னி:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இது பல இல்லத்தரசிகளின் பேவரைட். இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் அக்னி. இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கு முன்பு இவர் விஜேவாகவும், தொகுப்பாளராகவும் இருந்தார்.

கார்த்திக்கிற்குப் பதிலாக... `செம்பருத்தி' சீரியலின் புதிய ஹீரோவானார் யூடியூப் விஜே! | Anchor Agni committed as Sembaruthi serial hero

5. ஸ்ரீகுமார்:

 1. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாசமலர் சீரியல் வானத்தைப் போல. இந்த சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருபவர் ஸ்ரீகுமார். இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் தமன் குமார் நடித்திருந்தார். ஸ்ரீகுமார் பல ஆண்டு காலமாக சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஜீ தமிழில் முடிவடைந்த யாரடி நீ மோகினி சீரியலில் இவர் நடித்து இருந்தார்.
sun tv vanathai pola serial new hero srikumar

6. நந்தா:

 1. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் சீரியல் கோகுலத்தில் சீதை. இந்த சீரியலில் நந்தா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிகர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த டான்ஸ் மாஸ்டர் ஆவார்.
It was weird being in front of the camera after a gap: Nanda - Times of India

7. செந்தில்:

 1. இளசுகளின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. தற்போதும் இது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் செந்தில். இப்போதும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து வெளியேறினாரா நடிகர் செந்தில்- ரசிகர்கள் ஷாக் - சினிஉலகம்

8. சித்து:

 1. விஜய் டிவியில் டி ஆர் பியில் முன்னிலை வகிக்கும் சீரியலில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பிறந்த நாள் வாழ்த்துகள் சித்து...!

9. நந்தன்:

 1. சன் டிவியில் பல ஆண்டுகாலமாக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் சீரியல் சித்தி. தற்போது சித்தி 2 சீரியல் செல்கிறது. இந்த சீரியலில் கதாநாயகன் நடித்து வருபவர் தான் நந்தன். இந்த சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
முதல் படம் டிராப்... அடுத்த படம் வெளியாகலை... இப்போ சித்தி 2 டபுள் ரோல்! விடாமுயற்சியால் வென்ற கவின் - Indian Express Tamil suntv serial news| chithi 2 serial kavin

10. சஞ்சீவ்:

சின்னத் திரைக்கு வருவதற்கு முன் வெள்ளித் திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சஞ்சீவ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காற்றின் மொழி சீரியலில் நடித்தார். தற்போது எவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

raja rani fame sanjeev is t act in new sun tv serial
Advertisement