100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பாலாஜி மீது மீண்டும் புகார் அளித்த மனைவி.!

0
847
Balaji
- Advertisement -

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று நிகழ்ச்சி எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாலாஜி வெளியேறியபோது நித்யா, பாலாஜிக்கு 100 நாள் பரீட்சை ஒன்றை வைத்தார்.

- Advertisement -

தற்போது அந்த நூறு நாட்களும் முடிந்த நிலையிலும் இவர்கள் ஒன்றாக இணையவில்லை . இந்நிலையில் பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய செயலில் ஈடுபடும் பாலாஜி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் அவர் முறையிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 6 மாதத்திற்க்கு முன்னர்
தான் பாலாஜி மீது நித்யா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அத்துடன் இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement