தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் பெரிதாக படங்களில் காணவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்ததால் நித்யா மேனன் உருவக் கேலிக்கு உள்ளாகி இருந்தார். இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மேனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அதன் பலனாக இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது.
நித்யா மேனன் திரைப்பயணம்:
அந்த வகையில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் நித்யா மேனன் வாங்கியிருந்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்த காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

நித்யா மேனன் பேட்டி:
இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவன் தலைவலி படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்யா மேனன், நான் மூன்று மாத குழந்தையாக இருந்த போது
என்னுடைய அம்மாவிற்கு மகப்பேறு விடுப்பு முடிந்தது. பாட்டியிடம் என்னை விட்டுட்டு தான் அம்மா வேலைக்கு போவார். என்னுடைய பாட்டி தான் அம்மா இடத்திலிருந்து எனக்கு அன்பு செலுத்தினார்.
காதல் தோல்வி:
சின்ன வயதில் இருந்தே நான் தனிமையை பார்த்து தான் வளர்ந்தேன். அதனால் தான் கூட்டத்தில் சேர முடியவில்லை. நண்பர்கள் இருந்தாலுமே நான் தனியாகத்தான் இருப்பேன். அப்போதிலிருந்து நான் மற்றவர்களை விட வித்தியாசமாகிவிட்டேன். ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் எனக்கும் காதல் வந்தது. காதல் அனுபவம் வந்தது. ஒவ்வொரு அனுபவம் வலியை தந்தது. எத்தனை முறை காதலில் விழுந்தேனோ அத்தனை முறையும் என்னுடைய இதயம் உடைந்தது. அந்த நேரத்தில் எனக்கு ஒரு ஆத்ம துணை வேண்டும். அவருடன் ஒரு அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவே இல்லை.
https://www.youtube.com/watch?app=desktop&v=4YovAVJb2DU
திருமணம் பற்றி சொன்னது:
இப்போது நான் அந்த எல்லா உணர்வுகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன். மாதக்கணக்கில் தனியாக பயணம் செய்கிறேன். என் வேலைகளை நானே செய்கிறேன். சில சமயங்களில் மாத கணக்கில் எதுவும் செய்யாமல் கூட இருக்கிறேன். அது என்னை நானே அறிந்து கொள்ள உதவுகிறது. நான் ஆன்மீக பாதையை பின்பற்றுகிறேன். வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு இந்த பாதையில் எனக்கு பதில் கிடைத்திருக்கிறது. பொருள் சார்ந்த எதிலும் எனக்கு ஆர்வம் கிடையாது. நடிப்பு என்னுடைய தொழில். அதனால் தான் நான் இங்கே இருக்கிறேன். ஆனால், நான் அடிமை எல்லாம் ஆகவில்லை. சினிமா மீது மோகம் கிடையாது. வாழ்நாள் முழுவதுமே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையும் போடவில்லை.
எனக்கான ஆத்ம துணை கிடைத்தால் நாளை கூட திருமணம் செய்து கொள்வேன். ஆனால் இப்போது எனக்கு இருக்கும் தனிமை என் வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷத்தை அளிக்கிறது. ரத்தம் டாடாவும் திருமணம் செய்து கொள்வேன். அதேபோல நானும் தனிமை ரொம்ப நேசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






