கொஞ்சம் கூட புடிக்கல, சினிமாவை விட்டு விலக எடுத்த முடிவு- மனம் திறந்து நடிகை நித்யா மேனன் சொன்ன தகவல்

0
81
- Advertisement -

சினிமாவை பற்றி மனம் திறந்து நடிகை நித்யா மேனன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கித்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நித்யா மேனன், வினய், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
காதலர் தினத்திற்கு ரிலீஸ் ஆக இருந்த படம் திடீரென ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடந்தது. ரிலீஸ் தேதி விரைவில் இருப்பதால் தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நித்யா மேனன், எனக்கு சின்ன வயதிலிருந்தே டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது, கேமரா முன்னாடி வந்து நடிப்பதெல்லாம் பிடிக்காது.

- Advertisement -

காதலிக்க நேரமில்லை படம்:

சொல்லப்போனால், எனக்கு சினிமாவில் நடிக்கவே பிடிக்காது. என்னுடைய அம்மா தான் நடிக்க சொல்லி எனக்கு பிரஷர் கொடுத்தார். இப்ப வரைக்குமே எனக்கு சினிமா பிடிக்காது. என்னுடைய அம்மாவுடைய பிரஷரினால் தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் கூட சினிமா போதும் விலகலாம் என்றெல்லாம் நினைத்தேன். இதைப் பற்றி கூட நான் என்னுடைய பெற்றோர்களிடமும் சொன்னேன். அவர்களும் உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய் என்று சொல்லி விட்டார்கள்.

நித்யா மேனன் பேட்டி:

அந்த அளவுக்கு நான் யோசித்து இருந்தேன். ஆனால், திடீரென்று கடவுள் கொடுத்த லஞ்சம் தான் என்னை மீண்டும் சினிமாவில் நடிக்க வைத்திருக்கிறது. காரணம், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த எனக்கு தேசிய விருது கிடைத்திருந்தது. அந்த விருது கிடைத்த பிறகு தான் சினிமாவை விட்டு விலகக் கூடாது என்று நினைத்தேன். அதை தான் கடவுள் எனக்கு தந்த லஞ்சம் என நினைத்துக் கொண்டேன். மேலும், எனக்கு சினிமா பிடிக்காததற்கு காரணம், தனிப்பட்ட சுதந்திரம் கிடைக்காது தான்.

-விளம்பரம்-

சினிமா பிடிக்காத காரணம்:

சினிமா நடிகையாக மாறியதில் இருந்து நான் ரொம்ப என்னுடைய சுதந்திரத்தை மிஸ் பண்ணுகிறேன். இயல்பான வாழ்க்கை எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு வைல்ட் லைஃப் போட்டோகிராபர் போல வாழ வேண்டும் என்பது ஆசை என்று கூறியிருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார்.

நித்யா மேனன் திரைப்பயணம்:

இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. பின் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூலம் நித்யா மேனன் கேரியர் டாப்புக்கு சென்றது. தற்போது பிஸியான நடிகையாக நித்யா மேனன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

Advertisement