எனக்கு தேசிய விருதுக்கு தகுதி இல்லையா?- சாய் பல்லவி ரசிகர்களுக்கு நித்யா மேனன் பதிலடி

0
282
- Advertisement -

தமிழ் நடிகை நித்யா மேனன், தேசிய விருது வென்றது குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். அந்த வகையில் சமீபத்தில் 70 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்றது.

-விளம்பரம்-

அதனால் விருதுகள் வாங்கும் படங்களின் பட்டியல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த வருடம் அதிகமான விருதுகளை ‘காந்தாரா’ படம் தான் பெற்றிருந்தது. தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருந்தது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவருடைய படைப்புகளில் நீண்ட கால கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது.

- Advertisement -

திருச்சிற்றம்பலம் படம்:

இந்தப் படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை நித்தியா மேனன் வென்று இருந்தார். மேலும், சிறந்த நடன இயக்குனர் விருது சதீஷ் கிருஷ்ணனுக்கு, ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக கிடைத்திருந்தது. சமீபத்தில், விருது வழங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் விருது வென்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

நித்யா மேனன் சிறந்த நடிகையா:

ஆனால், நித்யா மேனனுக்கு விருது அறிவித்த நாளில் இருந்து, ஒரு சிலர் ‘திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தது ஒரு வழக்கமான கதாபாத்திரம் தானே. சாதாரணமாக நடிப்பதற்கெல்லாம் விருதா. இதைவிட நடிகை சாய் பல்லவி ‘கார்கி’ படத்தில் நன்றாக நடித்திருந்தார். எங்களுக்கு நித்யா மேனன் மீது கோபம் இல்லை. ஆனால், கார்கி படத்துக்கு ஏதாவது விருது கொடுத்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

கார்கி – சாய் பல்லவி:

இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி ஆழமாக ‘கார்கி’ படத்தில் கூறியிருப்பார்கள். இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்எஸ் சிவாஜி உட்பட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் சாய் பல்லவியின் எதார்த்தம் நடிப்பும், அழகும் அனைவரின் பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன் பதிலடி:

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யா மேனன், ‘எப்பொழுதும் கருத்துக்கள் இருக்கும். நீங்கள் விருது பெறவில்லை என்றால், ‘ ஓ, ஒருவேளை அவள் படம் நடிக்காமல் இருக்கலாம்’ என்று கூறுவார்கள். ஆனால், நீங்க வாங்கும் போது, இந்தப் படத்துக்காக இல்லை, வேற படத்துக்கு கொடுத்து இருக்கலாம் என்பார்கள். நீங்கள் விருது வாங்கவில்லை என்றால் அவர்கள், ‘ அட ஏன் அவள் அதை பெறவில்லை?’ என்பார்கள். இது எப்போதும் இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement