என்னுடைய மறு பக்கம்.! நித்யா மேனன் நடத்திய போட்டோஷூட்டை கண்டு வியந்த ரசிகர்கள்.!

0
1079
Nithya-menon

நடிகர் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார். 

பொதுவாக உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சிகளிலோ பெரிதாக நாட்டம் இல்லாத இவர் சில மாதங்களாக உடல் எடை கூடி பருமனாக ஆகிவிட்டார். சமீபத்தில் இவர் குண்டாக இருக்கும்புகைப்படம்  ஒன்று சமூக வலைதளத்தில் பரவ அதனை பலரும் கிண்டல் செய்தனர் ஆனால் நான் குண்டாக இருப்பது அவ்வளவு பெரிய விடயம் இல்லை . 

- Advertisement -

மேலும் நான் குண்டாக இருப்பது ஒருநாளும் எனக்கு தடையாக இருந்ததில்லை படங்களுக்காகவே நான் அப்படி இருந்தேன். ஆனால் இனி வரும் படங்களில் நான் கண்டிப்பாக மெலிந்தே காணப்படுவேன் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு மறு தாக்குதல் கொடுத்து பேசி இருந்தார் நித்யா மேனன்.

அதற்காக சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு வந்தார் நித்யா மேனன். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.  மேலும், சமீப காலமாக தனது உடலை குறைத்து வருகிறார் நித்யா மேனன்.

-விளம்பரம்-

சமீபத்தில் நித்யா மேனன் தனது இன்ஸ்டார்காம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு அறையில் அமர்ந்தபடி இருக்கும் நித்யா மேனன் ‘என்னுடை மறு பக்கம் , இன்னும் சிறப்பானவை இனிமேல் வரும் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பட வாய்ப்புகள் குறைந்து போன நித்யாவை அவரது நண்பர் நடிகர் பிரபுதேவா, ‘கோழி மூட்டை’ உடம்பை வைத்திருக்காமல் உடம்பை குறைத்தால் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement