மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க முடியாது ! அதிர்ச்சி காரணத்தை கூறிய நித்யா மேனன்

0
1043

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி செம்ம ஹிட் அடித்த திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் மூன்று விஜயில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் நித்யா மேனன். இந்த படத்தில் நித்யாமேனன் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

nithya-menen

சமந்தா, காஜல் என மேலும் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் நித்யா மேனனுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. மற்ற இரண்டு நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட இவருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.ஆனால் கதைப்படி இவர் கொல்லப்படுவார். இதுகுறித்து தற்போது நித்யாமேனன் பேசியுள்ளார்.

தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் தான் கொள்ளப்படுவதகா கூறினார். கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக இருந்தாலும் தான் கொல்லப்படுவது பிடிக்கவில்லை எனவும் கூறினார்.தான் நடித்த பெரும்பாலான படங்களில் கொல்லப்படும் காட்சி வைப்பதால் அது, போர் அடித்துவிட்டதாகவும் கூறினார்.அட்லீ இந்த கதையை கூறும் போது நான் இறப்பது போன்று கதையை கூறினார். இதனால் முதலில் நடிக்க மாட்டேன் என கூறினேன். பின்னர் விஜய்க்காக நடித்து கொடுத்தேன். இனிமேல் நான் சாவது போன்ற கதைகளில் நடிக்க மாட்டேன், என கூறினார் நித்யாமேனன்.