கல்லூரி விழாவில் மெர்சல் பாடல் பாடி அசத்திய நித்யா மேனன்..! மாணவர்கள் செய்த மாஸ்

0
971
Mersal
- Advertisement -

நடிகர் சித்தார்த் நடித்த ‘180 ‘படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் இவரை சற்று மறந்திருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் “மெர்சல்” படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை நித்யா மேனன் . மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றது என்று தெரியும். அதிலும் அந்த படத்தில் வந்த “ஆளப்போறான் தமிழன்” என்ற பாடல் மாபெரும் ஹிட் அடைந்தது.

இந்நிலையில் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த நித்யா மேனனிடம் மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடலை பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு நித்யா மேனன் “ஆளப்போறான் தமிழன்” பாடலில் வரும் சில வரிகளை பாட துவங்கியதும் மாணவர்கள் அனைவருமே ஆராவாரம் செய்தனர். இதோ அந்த வீடியோ பதிவு, பரவா இல்லை நித்யா மேனனும் நல்லா தான் பாடுறாங்க.

-விளம்பரம்-
Advertisement