மலை உச்சியில் இருந்து என்னை தள்ளி விட்டனர் அந்த படத்தில் – அப்பா என்னுடைய மகள் இறந்து விடுவாள் என்று கத்தினார். நடிகை நித்யா ரவீந்திரன்.

0
1710
Nithya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமாக 90ஸ் களில் இருந்த நடிகை நித்யா ரவீந்திரன். இவர் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான “குருதிக் களம்” என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதற்கு முன்பே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதற்கு பிறகு பல படங்களில் நடித்து நித்யா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் பிரபல ஊடகம் ஓன்று சமீபத்தில் இவரை பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் தான் சினிமாவிற்கு வந்ததை பற்றியும் படங்களில் நடித்த அனுபவம் பற்றியும்.

-விளம்பரம்-

அப்பாவின் ஆசை :

அந்த பேட்டியில் நடிகை நித்யா ரவிதாரர் கூறுகையில் “என்னுடைய அம்மாவின் பெயர் சுவாமி நாதன் அவர் பாமா கிரியேஷன் என்று ஒரு நாடகக்குழுவிற்கு கதை எழுதி தருவார். அப்படி அவர் கதை எழுதி தரும் நாடகங்களில் நான் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தேன். அப்படி அப்போது நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த விசு, பூர்ண விஸ்வநாதன், காத்தாடி ராமமூர்த்தி போன்றவர்களின் நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்படிதான் நான் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

- Advertisement -

சில காட்சிகள் வந்தன :

எனக்கு நடிப்பு என்பதில் ஈடுபாடு இல்லை ஆனால் அப்பாவிற்கு என்னை சினிமாவில் நடிகை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனக்கு என்னுடைய அப்பா எது சொன்னாலும் சரிதான். அப்பா தான் படிப்பது சுலபம் அதனை எப்போது வேண்டுமாலாலும் கற்றுக்கொள்ளலாம் நீ நடிக்க கற்றுக்கொள் என்றும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள என்றார். சரி என்று நானும் நடிக்க அரம்போதேன். அப்படி நான் “லாரி” போன்ற மலையாள படங்களில் நடிக்கும் போது ஒரு சில காட்சிகள் கவர்ச்சியாக இருந்தது.

சரி எது, தவறு எது என தெரியவில்லை :

ஆனால் எனக்கு அந்த நேரத்தில் அது தப்பாக தெரியவில்லை. அந்த வயசில் நான் செய்வது எது தப்பு, எது சரி என எனக்கு தெரியவில்லை. அதே போல கதையும் எனக்கு தவறாக தெரியவில்லை. அந்த காலத்தில் மலையாள படங்கள் என்றாலே கண்டிப்பாக மழையில் ஆடும் பாடல் இருக்கும். எனவே அது எனக்கு தவறாக தெரியவில்லை. அதே போல அப்போதெல்லாம் படங்களில் படப்பிடிப்பின் போது இதுதான் நடக்க போகிறது, இப்படித்தான் நடிக்க வேண்டும் இதற்கு உங்களுக்கு சம்மதமா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். என்று கூறி ஒரு உதாரணத்தையும் கூறினார்.

-விளம்பரம்-

ஓடும் லாரியில் படப்பிடிப்பு :

அதாவது நான் நடித்த லாரி படத்தில் நடிக்கும் போது வேக்யூம் ஸ்பேஸ் என்ற கட்சியில் நடித்தேன். வேக்யூம் ஸ்பேஸ் என்றால் கேமெராவை ஓடும் வாகனத்தில் பொருத்தி விடுவார்கள். கேமெரா மேன் போன்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு கட்சியில் லாரியில் சென்று கொண்டிருக்கும் போது பிரதாப் என்ற நடிகர் லாரியை ஒட்டிக்கொண்டிருக்கிறார், என்னுடைய அருகே சாந்த குமாரி என்ற நடிகை இருக்கிறார்.

கீழே தள்ளி விட்டனர் :

அந்த காட்சியில் நாங்கள் வில்லனிடம் இருந்து தப்பித்து சென்றுகொண்டிருகிறோம், ஏற்காட்டில் கொண்டாய் ஊசி வலையில் சென்று கொண்டிருக்கும் போது பிரதாப் என்னை குதி என்று சொன்னார். நான் என்ன குதி என்கிறாரே என நினைப்பத்தற்குள். தள்ளி விட்டுவிட்டார். நான் அங்கே விழுந்து உருண்டு உருண்டு கீழே வரும் போது அங்கே ஒரு கேமெரா வைத்து கட்சிதமாக வந்திருக்கிறது என்றனர். எனக்கு உலகமே சுற்றுகிறது என்னுடைய அப்பா நான் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்னுடைய பொண்ணை கொன்று விடுவீர்கள் போன்று இருகிறது என்று அலறினார்.

அடுத்த காட்சிக்கு அழைத்து சென்றனர் :

எனக்கு அப்பா பேசியது கேட்டது ஆனால் நான் பல முறை உருண்டு வந்ததினால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்படி அந்த நிகழ்வு முடிவதற்கு முன்னரே இதே போன்று தமிழுக்கு ஒரு காட்சி எடுக்க அழைத்து சென்றார். ஏனெற்றால் தமிழில் என்னுடைய அருகே இருக்க வேண்டியது ஒய்.விஜயா. பின்னர் மீண்டும் அதே காட்சியை எடுத்தார்கள். நான் ஏதாவது ஆகிவிட போகிறது என நினைத்து பயந்தேன் ஆனால் எதுவும் ஆகவில்லை. நான் இதனை எதற்கு கூறுகிறேன் என்றால் அந்த காலத்தில் இந்த காட்சியில் நீங்கள் நடிப்பீர்களா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். நாம் சென்று கேமெரா முன்னர் நடிக்க வேண்டும்.

Advertisement