இறுதியில் தளபதி விஜய் மடியில் கைவைத்த நித்யாநந்தா. கடுப்பில் விஜய் ரசிகர்கள்.

0
99443
Vijay-Nithyanandha
- Advertisement -

போலி சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இந்து மத போதனைகளை போதிப்பதாக கூறி பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் ஆசிரமங்கள் இல்லாமல் உலகில் பல நாடுகளில் இவருடைய கிளைகள் உள்ளன. உலக அளவில் இவருக்கு பக்தர்கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து வருகின்றன. குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து வருகின்றன.

-விளம்பரம்-
Image result for Nithyananda

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை ரஞ்சிதாவுடனான நித்யானந்தா படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இது அனைவருக்கும் தெரிந்தே. இந்நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் ஒரு பெண்ணை கடத்தி வைத்து உள்ளார் என்றும், அந்தப் பெண் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார் என்ற தகவலும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர் இந்திய நாட்டை விட்டு தப்பிச் சென்றார் என்றும் கூட கூறியுள்ளார்கள். இதன் காரணமாக குஜராத் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகிறது என்ற தகவலும் உள்ளது. இவ்வளவு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கினாலும் இவருக்கு இருக்கும் பக்தர் கூட்டங்கள் பெருகிக் கொண்டு தான் உள்ளது.

இதையும் பாருங்க : தனது 20 வயதில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற சரத்குமார். இதுவரை வெளிவராத அறிய புகைப்படம்.

மேலும், நாளுக்கு நாள் நித்தியானந்தா சுவாமிகளின் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டு உள்ளது. எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு யூடியூபில் அவர் பண்ணும் சேட்டைகளுக்கு லைக் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் கூட நித்யானந்த சுவாமிகள் சூடு ,சொரணை இல்லை என்பது குறித்த ஒரு வீடியோ பண்ணி இருந்தார். அது இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்ப நம்ம தளபதி விஜய்க்கு போட்டியாக நித்தியானந்தா ஒரு செயல் செய்து உள்ளார். 2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் “மெர்சல்”. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் வந்த ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாட்டோட டுயுனை அப்படியே திருடி லிரிக்ஸ் மட்டும் மாற்றி தனக்கான ஒரு பாடலாக வெளியிட்டு உள்ளார் நித்தியானந்தா. தற்போது அந்த பாடல் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் எல்லோரும் பயங்கர கடுப்பிலும்,கொந்தளிப்பிலும் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for alaporan tamilan

இவர் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே ஒரு தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இது இந்துக்களுக்கான ‘இந்து இறையாண்மை தேசம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் ஒரு அமைச்சரவையும் ஏற்படுத்தி உள்ளாராம். சமீபத்தில் கூட சாமியார் நித்யானந்தாவிடம் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் ஆசிர்வாதம் வாங்கி இருப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து கூட பல சர்ச்சைகள் எழுந்தது.

Advertisement