நித்யானந்தாவை ஆபாசமாக கலாய்த்த பிரபல இயக்குனர்..! இபப்டி சொல்லிட்டாரே..!

0
815
CS-Amudhan
- Advertisement -

நாட்டில் எவ்வளவோ பிரச்சனை போய்கொண்டிருந்தலும் பரம ஹம்ச நித்யானதாவின் வாழ்க்கை மட்டும் சந்தோசமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சையில் சிக்கினாலும் இவருக்கென்று கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இத்தனை காலம் ஆன்மிக சிந்தனைகளை மாட்டும் தனது பக்தர்களுக்கு அள்ளி வழங்கி வந்த நித்யானந்தா சமீபத்தில் விஞ்ஞான விதிகளையும் கூறியுள்ளார். அறிவியல் உலகில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பல்வேறு சூத்திரங்களை உலகத்திற்கு அளித்துள்ளார். அதில் முக்கிய சூத்திரம் என்றால் E = mc^2 என்ற ஆற்றல் சமன்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.

இந்நிலையில் நித்யானதா, ஐன்ஸ்டைன் வகுத்த E = mc^2 சமன்பாடு மிகவும் தவறு என்றும் அதில் M என்ற ஆங்கில வார்த்தை MATTER என்பது தொடர்ச்சியான விஷயம் (MATTER IS CONTINUOUS ) என்பது போல ஒரு சொற்பொழிவையாற்றினார். இதனை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சனம் செய்தனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நித்யானந்தா கூறியதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு காலய்த்துள்ள “தமிழ்படம்” இயக்குனர் சி எஸ், நித்யானந்தா கூறியதில் MATTER IS CONTINUOUS என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கிண்டலடித்துள்ளார். இதனை புரிந்துகொண்ட அனைவரும் நித்யானந்தாவை கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement