லேடி அஜித் போல பார்முலா ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த நடிகை. யாருன்னு தெரியுதா ? வைரலாகும் வீடியோ.

0
1239
Nivetha
- Advertisement -

அஜித்தை போல பார்முலா ஒன் கரை ஒட்டி அசத்தி இருக்கிறார் பிரபல நடிகை. தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவையும் தாண்டி இவருக்கு பைக், ரேஸ் கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும்.

-விளம்பரம்-
Image

அஜித்தை ரோல் மாடலாக வைத்து பல நடிகர் நடிகைகள் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்ட ஆசைபட்டு கூட இருக்கின்றனர். ஆனால், நடிகைகளை பொறுத்த வரை பொதுவாக ஸ்போர்ட்ஸ் பைக்கை ஒட்டி தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக அஜித்துக்கு பின் பார்முலா ரேஸ் காரை ஓட்டிய பெருமையை பெற்று இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

- Advertisement -

நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் மதுரையை சேர்ந்த பக்கா தமிழ் பெண். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக நடிகைளில் ஒருவர் ஆவார். இப்படி ஒரு நிலையில் பார்முலா ரேஸ் காரை பார்முலா ட்ராக்கில் ஒட்டி பழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement