கையில் ரத்த காயத்துடன் நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சிறுவயதாக இருக்கும் போதே துபாய் சென்று விட்டார். அங்கேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இவர் மாடலிங்கில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு இவர் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினையும் இவர் பெற்றார். அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘டிக் டிக் டிக்’, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘திமிருபிடித்தவன்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் போன்ற பல படத்தில் நிவேதா நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படத்திலும் நடித்து இருக்கிறார்.
கடைசியாக நிவேதா நடித்த படம்:
கடைசியாக இவர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் முகில் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் தான் பொன்மாணிக்கவேல். இந்த படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் சந்திரா, மகேந்திரன், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நிவேதா நடித்த பார்ட்டி படம்:
இதனைத் தொடர்ந்து நிவேதா அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை டி. சிவா தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஜெய், சாம், சிவா, சந்திரன், சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் ஏற்கனவே வெளியாக வேண்டியது. பல காரணங்களால் தள்ளிக் கொண்டே சென்றிருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்று சமீபத்தில் வெங்கட்பிரபு பேட்டியில் கூறியிருந்தார்.
நிவேதா நடிப்பில் உருவாகி வரும் படம்:
இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். தற்போது நிவேதா பெத்துராஜ் அவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் இவர் எழில் இயக்கத்தில் ஜகஜாலக் கில்லாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, நிவேதா பெத்துராஜ் அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோ, ரசிகர்களுடன் உரையாடுவது என்று இருப்பார்.
நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட புகைப்படம்:
இந்த நிலையில் தற்போது நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நிவேதா பெத்துராஜ் தன் வளர்ப்புப் பிராணி பூனை உடன் எடுத்த புகைப்படம். அதில் அவருடைய பூனை நிவேதாவை காயப்படுத்தி இருக்கிறது. அந்த புகைப்படத்தை தான் நிவேதா பெத்துராஜ் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் என்னாச்சு? ஏன் இப்படி ஆகிவிட்டது? என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.