தன்னுடைய காதலர் பற்றி நடிகை நிவேதா பெத்துராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதாக இருக்கும் போதே துபாய் சென்று அங்கேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இவர் மாடலிங்கில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பிறகு இவர் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு நாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நாயகி என்ற விருதையும் நிவேதா வென்றார். அதன் பிறகு இவர், ‘டிக் டிக் டிக்’, திமிரு புடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத் தமிழன் உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
நிவேதா பெத்துராஜ் திரைப்பயணம்:
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இறுதியாக இவர் தமிழில் இயக்குனர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ஜகஜால கில்லாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் சில படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் நிவேதா பெத்துராஜின் காதலன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிவேதா பெத்துராஜ் காதல்:
அதாவது சில வாரங்களுக்கு முன்பு தான் நிவேதா பெத்துராஜ், தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். இவருடைய காதலர் பெயர் ரஜித் இப்ரான். இவர் தொழிலதிபராக இருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும், இவர்களுக்கு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காதலர் பற்றி சொன்னது:
அதோடு இவர்களின் திருமணத்திற்கு இரண்டு குடும்பமே சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய காதலர் குறித்து பேட்டியில் நிவேதா பெத்துராஜ், ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் அவரை துபாய் ரேஸ் டிராக்கில் தான் பார்த்தேன். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. நானும் அவரும் வெவ்வேறு மதங்களாக இருந்தாலுமே ரெண்டு குடும்பங்களும் ஒத்துப்போனதால்தான் இந்த திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறோம். எளிமையாக எங்களுடைய திருமணத்தை நடத்த இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.






