அப்போ விஜய் தங்கை, இப்போ ரஜினியின் மகளா.! ரஜினி 166-ல் இணைந்த நடிகை.!

0
320
Rajini 166

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.

Rajini-166

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் வந்த தகவலின்படி இன்று(ஏப்ரல் 3) இந்த படப்பிடிப்பிற்கான போட்டோ ஷுட்கள் நடைபெற்றதாகவும் அதில் ரஜினி கலந்து கொண்டதாகவும் நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க : ஆம், நான் கர்ப்பமாக இருக்கிறேன்.! முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட சுஜா.! 

- Advertisement -

மேலும், இதில் கூடுதல் தகவல் என்னவெனில் இந்த படத்தில் ரஜினியின் வில்லனாக தேசிய சூர்யா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் ரஜினி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தில் ஒரு ஓரத்தில் எச்சில் சூர்யாவும் நிற்பது போல இருக்கின்றது. எனவே ,இந்த படத்தில் பேசிய சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது. நடிகர் சூர்யா ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிகை நிவேதா தாமஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிவேதா தாமஸ் ஏற்கனவே விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்திலும், கமலுக்கு மகளாக பாபநாசம் படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement